உணவு சாப்பிட்டதும் நீங்கள் தப்பியும் இந்த 7 தவறுகளை செஞ்சுடாதீங்க!!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் நீங்கள் சாப்பிடும் உணவு, வாழ்க்கை தரம், பழக்க வழக்கங்கள் கொண்டுதான் தீர்மானிக்க்ப்படும். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசப்படும். ஒருவர் மது குடிப்பதால் பாதிப்பு எதுவும் வரவில்லை. நன்றாகத்தான் இருக்கிறார் என்றால் மற்றவர்களுக்கும் அப்படியே நன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை.

அப்படித்தான் உணவுகளும் கூட. நீங்கள் ஆரோக்கியம் என நினைக்கும் ஒரு உணவுப் பொருள் மற்றவருக்கு அலர்ஜியாக இருக்கக் கூடும்.

அஜீரணம், முதல் அல்சர் வரை, உடல் நோய்களான சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை எல்லாவற்றிற்கும் காரணம் மெட்டபாலிசத்தில் நடக்கும் கோளாறுகள்தான். அதற்கு முக்கிய காரணமே நமது பழக்க வழக்கம்தான். ஆனால் நாம் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்தான்.

சரி. இந்த விஷயத்துக்கு வருவோம். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் இந்த பெரும்பாலான தவறுகள்தான் உங்க மெட்டபாலிசத்தை பாதிக்கிறது என்பது தெரியுமா? அவசர கதியில் செய்கின்ற இந்த விஷயங்கள் உங்கள் உணவுக் குடலுக்கு மிகவும் பாதிக்கும். அவற்றை என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேக நடை, உடற்பயிற்சி :

வேக நடை, உடற்பயிற்சி :

சாப்பிட்டதும் காலாற நடக்கலாம் என நிறைய பேர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சாப்பிட்ட உடனே சாதரணமாக மெதுவாக நடக்கலாம்.

ஆனால் நீண்ட தூரம் வேகமாக நடப்பதோ, அல்லது உடற்ப்யிற்சியோ செய்யவே கூடாது. இப்படி செய்வதால் ரத்த ஓட்டம் கால்களுக்கு அதிகம் செல்வதால் இரைப்பு தேவையான ரத்தம் தடைபடும். இதனால் ஜீரணம் தட்டுப்படும். அதன் அறிகுறியாக தசைப் பிடிப்பு, வலி, விக்கல், போன்றவை ஏற்படும்.

புகைப் பிடித்தல் :

புகைப் பிடித்தல் :

புகைபிடித்தல் பொதுவாகவே நல்லதில்லை. அதிலும் சாப்பிட்டதும் புகைபிடிப்பது போல் தீங்கு எதுவும் இல்லை. சாப்பிட்டதும் கிடைக்கக் கூடிய சத்துக்களான விட்டமின், மினரல், கால்சியம், விட்டமின் சி, டி என எல்லா சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. எதிர்மறையான பாதிப்புகளை அதிகம் கொடுக்கிறது. சாப்பிட்ட பின் குறைந்தது 2 மணி நேரத்திற்கு புகைப் பிடிக்கக் கூடாது.

தூக்கம் :

தூக்கம் :

சாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்வது மிக ஆபத்தானது. உடல் பருமன், நெஞ்செரிச்சல் மட்டுமல்ல, மூளை பக்கவாதத்தையும் தந்துவிடமாம். இதனால் இறப்பு கூட நேரிடும் அபாயமும் உண்டு என கூறுகின்றனர். ஆகவே சாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்ளாதீர்கள். செரிப்பதற்கென நேரம் சற்று கொடுங்கள்.

டீ குடித்தல் :

டீ குடித்தல் :

நான் நிறைய பேரை பார்த்திருக்கிறோம். சாப்பிட்ட உடனேயே டீ குடிக்க செல்வார்கள். ஆனால் அது மிகவும் தவறு. சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள் டீ குடிப்பதால் உங்கள் உணவிலிருந்து உடல் உறிஞ்சும் இரும்புச் சத்து தடுக்கப்படுகிறது.

உங்களுக்கு அனிமியா இருந்தால் அல்லது கர்ப்பிணியாக இருந்தால் இப்படி சாப்பிட்டதும் டீ, காஃபி குடிக்கும் பழக்கத்தை அறவே கைவிட வேண்டும்.

பழங்கள் சாப்பிடுதல் :

பழங்கள் சாப்பிடுதல் :

பழங்கள் நல்லதுதான். ஆனால் நல்ல விஷயத்தை தவறான நேரத்தில் செய்தால் கெட்டதாக முடிந்துவிடும் என்பதற்கு பழங்களும் ஒரு உதாரணம்.

சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடும்போது அது ஜீரணிக்க தாமதமாகிறது. இதனால் அதிக அமிலன் உண்டாகி ஒட்டுமொத்த ஜீரண மண்டலத்திற்கு எத்ர்மறை பலன்களை அளித்துவிடும். பழங்களை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அவற்றின் முழுச் சத்துக்களும் கிடைக்கும்.

இறுக்கிய உடை :

இறுக்கிய உடை :

சாப்பிட்டதும் சிலர் உடைகளை தளர்த்து விடுவார்கள். இது மிகவும் நல்லதே. இறுக்கிய பெல்ட் அல்லது உடை உங்கள் இரைப்பைக்கு பாதிப்பை உண்டாக்கும். இதனால் தேவையற்ற குடல் பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்கலாம்.

குளிப்பது :

குளிப்பது :

இது உங்கள் அனேக பேருக்கு தெரிந்திருக்கக் கூடும். சிறு வயதிலிருந்தே பெரியவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் பலருக்கும் ஏன் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என்பதற்கான காரணங்கள் தெரிவதில்லை.

காரணம் :

காரணம் :

சாப்பிட்டதும் கல்லீரல் வேலை செய்ய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உடல் வெப்பம் அதிகரித்திருக்கும். இதனால் உணவுகள் வேகமாக செரிமானமாகிக் கொண்டிருக்கும். அந்த சமயத்தில் குளித்தால் உடல் குளிர்ந்துவிடும். என்சைம் சுரப்பது குறைந்துவிடுவதால் உணவுகள் ஜீரணிக்காது.

சில்லென்று குடிப்பது :

சில்லென்று குடிப்பது :

சாப்பிட்டதும் முத்தாய்ப்பாய் சிலர் ஐஸ்க்ரீம் அல்லது ஜூஸ் குடிப்பார்கள். இது மோசமான பாதிப்பை உங்கள் மெட்டபாலிசத்திற்கு தந்துவிடும். ஐஸ் நீரும் குடிக்கக் கூடாது. இவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் பின்னாலில் உணவு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

சாப்பிட்டதும் உடனே செய்ய வேண்டியது என்ன?

சாப்பிட்டதும் உடனே செய்ய வேண்டியது என்ன?

சாப்பிட்டதும் நீர் குடிக்கக் கூடாது என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அப்படி குடிப்பது தவறில்லை. சாதாண நீரை குடிக்கலாம். நீங்கள் சாப்பிட்ட உணவிற்கு தேவையான நீரை குடிக்க வேண்டு. இதனால் செரிமானம் நன்றாக இருக்கும். உடல் பருமனாக இருப்பவர்கள் லேசான சுடு நீர் குடிக்கலாம்.

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகள் எவை ?

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகள் எவை ?

சிலருக்கு இயற்கையிலேயே செரிமானப் பிரச்சனை இருக்கும் அவர்கள் செரிமான பாதிப்பை போக்கும்படியான உணவுகளை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு கோளாறுகள் நீங்க நலம் பெற முடியும். அப்படியான உணவுகளை பார்க்கலாம்.யோகார்ட் :

யோகார்டில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றது. இவை உடல் என்சைம்கள் சுரக்க உதவி புரிகின்றன. உணவு சாப்பிட்டதும் யோகார்ட் சாப்பிடுவதால் ஜீரண சக்தி மேம்படும்.

இஞ்சி நீர் :

இஞ்சி நீர் :

உணவு சாப்பிட்டதும், இஞ்சி நீர் குடிப்பது மிகவும் நல்லது. அஜீரணங்களை போக்கி உங்கள் செரிமான சக்தியை அதிகப்படுத்தும். தினமு மதிய வேளை குடித்தால் நல்லது. அல்சர் இருப்பவர்கள் மட்டும் தவிர்க்கவும்.

சீரக நீர் :

சீரக நீர் :

இது மிகவும் அற்புதமான பலன்களை தருகின்றது. உணவு சாப்பிட்டபின் சீரக நீரைக் குடிப்பதால் அஜீரணம், வாய்வுத் தொல்லைகள் வரவே வராது. எந்த கொழுப்பு உணவுகள் என்றாலும் விரைவில் செரிமானமாகும்.

கல்லீரல் புற்று நோயை தடுக்கும் உணவுகள் !!

கல்லீரல் புற்று நோயை தடுக்கும் உணவுகள் !!

கல்லீரல் புற்று நோயை தடுக்கும் உணவுகள் !!

கல்லீரல் மெட்டபாலிசத்தை பாதிக்கும் விஷயங்களையும் ஜீரணத்தை அதிகரிக்கச் செய்யும் விஷயங்களையும் பார்த்தோம். அது போல் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகளையும் புற்று நோயை தடுக்கும் உணவுகளையும் பார்க்கலாம்.

பப்பாளி :

பப்பாளி யை தினமும் தவறாமல் சாப்பிடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது உடலுக்கு உண்டாகும் கிருமிகளிய அழிக்கிற்டஹு. அதோடு என்சைம்களிய சீராக சுரக்கச் செய்கிறது. வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது.

வெங்காயம் :

வெங்காயம் :

வெங்காயம் புற்று நோய் செல்களிய அழிக்கக் கூடியது. கல்லீரலில் உருவகும் நச்சுக்களை வெளியேற்றும். அதிலும் சின்ன வெங்காயம் தினமும் உணவில் பச்சையாக சேர்த்துக் கொள்ளுங்கள். கல்லீரல் நன்றாக இருக்கும்.

தேநீர் :

தேநீர் :

தினமும் இரு வேளை க்ரீன் டீ அல்லது சாதரண டீ அருந்துவது உங்கள் குடல்களுக்கு மிகவும் நல்லது. அதிலுள்ள அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உங்கள் கல்லீரலை அரோக்கியமாக வைத்திருக்கும்.

 ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் இலைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஆலிவ் இலிய மற்றும் எண்ணெய் கல்லீரல் புற்று நோய்க்கு எதிராக போராடுகிறது என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.

கேரட் :

கேரட் :

கேரட் புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நோய் எதிர்ப்புசக்தி உடைய இது பல்வேறு சத்துக்களை கொண்டது. கேரட்டை தினமும் அல்லது வாரம் 3 நாட்களாவது அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உணவுக் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

 அருகம் புல் :

அருகம் புல் :

அருகம்புல் ஒரு நல்ல மருந்தாகிறது. அதிக புரதச்சத்து உடையது. நோய் நீக்கியாக விளங்கும் அருகம்புல் மூப்பை தடுக்கிறது. துளசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. உச்சி முதல் பாதம் வரை வரும் நோய்களுக்கு மருந்தாகிறது. வில்வம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Things that should be avoided after meal

7 Things that should be avoided after meal