மனதை ஒருமுகப்படுத்த மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அற்புத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று நம்மில் பலர் சரியாக எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமலும், ஞாபக மறதியினாலும் கஷ்டப்படுகின்றனர். மூளைக்கு வேண்டிய சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்தால், இம்மாதிரியான பிரச்சனைகளே இருக்காது.

ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால், மூளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் மூளையின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக நினைவாற்றல் குறைவு மற்றும் கவனச்சிதறல் போன்ற பிரச்சனையால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.

இருப்பினும் குறிப்பிட்ட உணவுகள் இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். இங்கு அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உட்கொண்டு நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசலைக் கீரை

பசலைக் கீரை

பசலைக் கீரையில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, கவனச்சிதறல் ஏற்படுவதைத் தடுத்து, நினைவாற்றலை அதிகரிக்கும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் மூளையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும். மேலும் இது நினைவாற்றலை அதிகரிக்கவும், கவனச்சிதறலைத் தடுக்கவும் செய்யும். ஆகவே இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ/வெண்ணெய் பழம்

மூளைச் செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளில் அவகேடோ பழமும் ஒன்று. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை, மூளை செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

சால்மன்

சால்மன்

சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஒருவரின் மூளைச் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் நிறைய ஆய்வுகளும் சால்மன் மீனை உட்கொண்டால், ஒருவரின் மனநல ஆரோக்கியம் மேம்படுவதாக சொல்கின்றன.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் நினைவாற்றல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் உணவுகளுள் ஒன்று. தொடர்ந்து பீட்ரூட்டை உட்கொண்டு வந்தால், அது ஒருவரது மனதை ஒருமுகப்படுத்த உதவி, நினைவாற்றலையும் அதிகரிக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலி சுவையுடன் இல்லாவிட்டாலும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தன்னுள் கொண்டது. குறிப்பாக ஒருவரது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

முட்டை மஞ்சள் கரு

முட்டை மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கரு ஒருவரது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளில் ஒன்று. ஆய்வுகளும் முட்டையின் மஞ்சள்
கருவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கூறுகின்றன. எனவே தினமும் ஒரு முட்டை உட்கொண்டு மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try These Amazing Foods To Improve Your Focus And Memory

Take a look at these amazing foods that can improve your memory and concentration skills and enhance your brain functionality.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter