சூயிங்கம் விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம்மை சிறுவயதில் பல பொய் புரட்டு சொல்லி செம்மையாக ஏமாற்றி இருப்பார்கள். இப்போது அதை நினைத்து பார்த்தால் மிகவும் சிரிப்பாக இருக்கும்.

சாப்பிடாட்டி பேய் புடிச்சுட்டு போயிடும், வெள்ளை காக்கா நிழலை மிதித்தால், நகத்தில் வெள்ளை புள்ளி விழும், அன்டர்டேக்கர்-ன் 7உயிர்..., இதுப்போல பலவன இருக்கின்றன.

அதில் ஒன்று தான் சூயிங்கம் விழுங்கிவிட்டால் வயிறு ஒட்டிக்கொள்ளும், அது சரியாக 7 வருடம் ஆகும், செரிமானம் ஆகாது என பல விஷயங்கள் கூறுவார்கள்.

இன்றும் கூட ஒருசிலர் சூயிங்கம் விழுங்கிவிட்டு பயப்படுவதுண்டு. ஆனால், உண்மையில் சூயிங்கம்மை விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என்பதை பற்றி பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
7 வருடம்!

7 வருடம்!

நீண்ட நாட்களாக ஒரு புரளியை நீங்கள் கேள்விப்பட்டு வந்திருப்பீர்கள். சிறு வயது முதலே சூயிங்கம்மை விழுங்கினால் அது செரிமானம் ஆகாது, ஒருசில வருடங்கள் அது வயிற்றில் தங்கிவிடும் என்றெல்லாம் கூறுவார்கள். இது முற்றிலுமான பொய்.

இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் கொண்ட சூயிங்கம் வயிற்றில் செறித்து விடும்.

சூயிங்கம் கரையாது?

சூயிங்கம் கரையாது?

சூயிங்கம்-ல் இருக்கும் அந்த கம் போன்ற மூலப்பொருள் எளிதாக கரையாது, அது வயிற்றிலேயே ஒட்டிக்கொள்ளும் என கூறுவார்கள். அப்படி இல்லை. மற்ற உணவுகளை காட்டிலும் இது முழுமையாக செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளுமே தவிர வயிற்றிலேயே தங்கிவிடாது.

உடல்நலக் கோளாறுகள்!

உடல்நலக் கோளாறுகள்!

குழலுறுப்பு (Diverticulitis) போன்ற சில உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் சூயிங்கம் விழுங்கினால் பாதகமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. வயிற்று வலி. பிடிப்பு போன்றவை ஏற்படலாம்.

பெரிய அளவில்...

பெரிய அளவில்...

பெரிய அளவில் சூயிங்கம்மை விழுங்கினால் அது பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் சில சமையம் சூயிங்கம்மை விழுங்கும் போது தொண்டையில் அது சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

வாய் துர்நாற்றம்!

வாய் துர்நாற்றம்!

உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு நிமிடங்கள் சூயிங்கம் மென்றால் வாய் துர்நாற்றம் குறையும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் அதிகம் சூயிங்கம் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்.

தாடை பிரச்சனை!

தாடை பிரச்சனை!

தினமும் அதிக நேரம் சூயிங்கம் மெல்வது தாடை எலும்பில் கோளாறுகள் உண்டாக்கலாம். இந்த பழக்கத்தால் வெளிநாட்டில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு கோளாறு உண்டானது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This is What Happens in Your Body When You Swallow a Chewing Gum

This is What Happens in Your Body When You Swallow a Chewing Gum. Shocking!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter