தினமும் பல மணிநேரம் சூயிங் கம் மென்ற பெண்ணின் அவல நிலை!!!

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட பழக்கமாக இருப்பது சூயிங்கம் மெல்வது. சிலரால் சூயிங்கம் மெல்லாமல் வேலையே செய்ய முடியாது. விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் சூயிங் கம் மெல்லும் பழக்கம் உடையவர்களாக தான் இருப்பார்கள். இது போக, புகை பழக்கம் இருக்கும் நபர்கள் சிகரட் வாசம் வெளிவராமல் இருக்க சூயிங் மெல்லுவார்கள்.

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

கிளேரி எம்ப்ளிடன் என்பவரும் இதே போல தினமும் சூயிங்கம் மெல்லும் பழக்கம் கொண்டவராக தான் இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அது அவரது உடல்நலத்தை பதம் பார்க்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆம், இப்போது அவர் தனது தாடை பகுதியில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்...

மனித உடலுக்குள் இருக்கும் தனித்தன்மையுடைய அதிசயங்கள் - அட உங்ககிட்டையும் இருக்கு பாஸ்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிவெர்பூல் சேர்ந்தவர்

லிவெர்பூல் சேர்ந்தவர்

கிளேரி எம்ப்ளிடன், லிவெர்பூல் பகுதியை சேர்ந்தவர். நான்கு குழந்தைகளுக்கு தாயான 38 வயது நிரம்பிய இந்த பெண்மணிக்கு சூயிங் கம் ரூபத்தில் விதி விளையாடிவிட்டது. ஆம், தினமும் மணிக்கணக்கில் சூயிங் மென்ற கிளேரி எம்ப்ளிடனுக்கு இப்போது தாடையில் பிரச்சனை ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தாடையில் என்ன பிரச்சனை

தாடையில் என்ன பிரச்சனை

தினமும் குறைந்தது ஏழு மணிநேரம் சூயிங்கம் மெல்லும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார் கிளேரி எம்ப்ளிடன். இதன் விளைவாக அவ்வப்போது சூயிங்கம் மெல்லும் போது அவரது தாடை பகுதியில் கீச், கீச் என்ற சத்தம் வந்துள்ளது. ஆனால், ஆரம்பத்தில் இவர் பெரியதாய் எடுத்துக்கொள்ளவில்லை. ஐந்து வருடமாக அதே பொருட்படுத்தாமல் இருந்தமையால், இப்போது தாடையை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கிளேரி எம்ப்ளிடன்.

ஒரு சென்டிமீட்டர் கூட திறக்க முடியாது

ஒரு சென்டிமீட்டர் கூட திறக்க முடியாது

தொடர்ந்து சூயிங்கம் சென்று வந்ததால் தாடையில் பிரச்சனை ஏற்பட்ட கிளேரி எம்ப்ளிடனால் இப்போது தனது வாயை ஒரு சென்டிமீட்டர் அளவு கூட திறக்க முடியாத அவல நிலையில் இருக்கிறார். இதனால், இப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்.

முகம் பாதிக்கும்

முகம் பாதிக்கும்

நாள் முழுக்கு சூயிங்கம் மென்றதால் தாடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய, இவரது இருபக்க முகத்தையும் அறுத்து, தாடை இணைப்பு பகுதிகளை ப்ளேட் வைத்து இனிக்க வேண்டும். இது, இவரது முக பாவத்தையே மாற்றிவிடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 உடல்நலத்துக்கு நல்லது என நினைத்த கிளேரி எம்ப்ளிடன்

உடல்நலத்துக்கு நல்லது என நினைத்த கிளேரி எம்ப்ளிடன்

விளம்பரத்தில் வரும், இந்த சூயிங்கம் மென்றால் உடல்நலத்திற்கு நல்லது பற்கள் பளபளக்கும் என்ற வாசகங்களை நம்பி இருப்பார் போல கிளேரி எம்ப்ளிடன். உடல் நலத்திற்கு நல்லது என நம்பி தினமும் அதிக நேரம் சூயிங்கம் மென்றதாக கூறுகிறார் கிளேரி எம்ப்ளிடன். இதிலும் உடல்நலன் கருதி இவர் சுகர்-ஃப்ரீ சூயிங்கம் தான் உண்டேன் என்று கூறுகிறார். எதிர்பாராத விதமாக தாடையில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது என கூறுகிறார் கிளேரி எம்ப்ளிடன்.

கனவிலும் நினைக்கவில்லை

கனவிலும் நினைக்கவில்லை

தான் ஆரோக்கியமான பழக்கமாக கருதிய சூயிங்கம் மெல்வது. இப்போது எனக்கு இவ்வளவு வலிகளை தரும் என தான் கனவிலும் நினைக்கவில்லை என கூறுகிறார் கிளேரி எம்ப்ளிடன்.

திடீரென அடைப்பட்ட கிளேரி எம்ப்ளிடனின் வாய்

திடீரென அடைப்பட்ட கிளேரி எம்ப்ளிடனின் வாய்

ஒரு வருடத்திற்கு முன், எப்போதும் போல தனது விருப்பமான சூயிங்கம்மை மென்று வந்துள்ளர் கிளேரி எம்ப்ளிடன். திடீரென வாய் அடைப்பட்டுவிட்டதாம். அதன் பிறகு தான் தாடையில் ஏதோ பிரச்சனை என்றும், ஐந்து வருடமாக ஏற்பட்ட கீச், கீச் சத்தம் இதற்கான அறிகுறி என அறிந்துள்ளார் கிளேரி எம்ப்ளிடன்.

சிகிச்சை மேற்கொண்டு வரும் கிளேரி எம்ப்ளிடன்

சிகிச்சை மேற்கொண்டு வரும் கிளேரி எம்ப்ளிடன்

பிறகு மருத்துவரிடம் பரிசோதனை செய்த போது தான் தனக்கு இப்படியொரு பிரச்சனை இருப்பதும், இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிந்துள்ளார் கிளேரி எம்ப்ளிடன். இப்போது கடந்த ஆறு மாதங்களாக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் கிளேரி எம்ப்ளிடன்.

 மருத்துவர் கருத்து

மருத்துவர் கருத்து

உணவருந்திய பிறகு சூயிங்கம் மெல்வதால் எச்சில் சுரக்க உதவும். இது, வாய் நலனிற்கு நல்லது தான். ஆனால், கிளேரி எம்ப்ளிடன் ஓர் நாளுக்கு ஏழு மணி நேரம் வரையிலும் சூயிங்கம் மென்றது தான் அவரது அவல நிலைக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

தலைவலியும் வரும்

தலைவலியும் வரும்

அதிகமாக சூயிங்கம் மென்றால், தாடை எலும்பு தேய்மானம் ஏற்படுவது மட்டுமின்றி, தலைவலி வரவும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Tragedy Of Women Chewed Gum For More In A Day

Tragedy Of Women Chewed Gum For More In A Day. Now, she is in need of operate her jaws. Take a look.
Subscribe Newsletter