பாலியல் பிரச்சனைகளைத் தடுத்து, செக்ஸ் வாழ்க்கையில் முழு இன்பத்தைக் காண உதவும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்களுடைய செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமா? அப்படியெனில் விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்த்துப் போராடும் மற்றும் நீண்ட நேரம் சிறப்பாக படுக்கையில் செயல்பட உதவும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள்.

அதிலும் திருமணமான புதிய தம்பதியர் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவது, உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தைப் பெற உதவும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் பல பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

சரி, இப்போது பாலியல் பிரச்சனைகளைத் தடுத்து, செக்ஸ் வாழ்க்கையில் முழு இன்பத்தைக் காண உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் நல்ல மனநிலையை உணர வைக்கும் டோபமைன் என்னும் கெமிக்கல் மூளையில் இருந்து வெளியிடப்படும். மேலும் இந்த கெமிக்கல் உற்சாகம், ஈர்ப்பு மற்றும் நன்னிலை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டவும் செய்யும்.

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்

நட்ஸ்களில் உள்ள அர்ஜினைன், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். அதிலும் பாதாமில் உள்ள அமினோ அமிலங்கள், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழம் கூட மிகவும் சிறந்த பாலுணர்வைத் தூண்டும் உணவுப் பொருள். இதில் கரையக்கூடிய மற்றம் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இப்பழத்தை உட்கொண்டால், படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியும்.

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ பழத்தில் உள்ள ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6, பாலியல் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் இதில் உள்ள ஃபோலிக் அமிலம் உடலில் ஆற்றலை அதிகரிக்கவும், வைட்டமின் பி6 ஹார்மோன்களை நிலையாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

மாதுளை

மாதுளை

மாதுளை ஜூஸை ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் குடித்து வந்தால், பாலுணர்ச்சி அதிகரிக்கும். மேலும் இப்பழம் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்து, பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மிளகாய்

மிளகாய்

மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் உட்பொருள், இதயத் துடிப்பை அதிகரிப்பதோடு, உடலில் வெப்பம் மற்றும் வியர்வையைத் தூண்டும். உடலினுள் வெப்பம் அதிகரித்து பாலுணர்வும் அதிகரிக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்து வர, பிறப்புறுப்புப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் இதனை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் உட்கொண்டால், உடலுறவில் முழு இன்பத்தையும் காணலாம்.

அஸ்வகந்தா வேர்

அஸ்வகந்தா வேர்

அஸ்வகந்தா என்னும் பாரம்பரிய மூலிகை வேர், மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்க நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் புரோமெலைன் என்னும் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் உட்பொருள் உள்ளது. மேலும் இதில் உள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் பொட்டாசியம், உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய சத்துக்களான ஜிங்க், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவை அதிகம் உள்ளது.

பூண்டு

பூண்டு

பூண்டு மிகவும் சிறந்த ஓர் பாலுணர்ச்சியைத் தூண்டும் பொருள். இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும். அதே சமயம் இதனை அதிக அளவில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வந்தால், கருவுறுதலில் இருக்கும் பிரச்சனைகள் மட்டுமின்றி, பாலியல் பிரச்சனைகளும் குணமாகும். ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும்.

முட்டைகள்

முட்டைகள்

முட்டைகளில் வைட்டமின் பி6 மற்றும் பி5 ஏராளமாக நிறைந்துள்ளன. இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் உட்கொண்டு வந்தால், மன அழுத்தம் குறைவதோடு, பாலியல் உணர்ச்சிகளும் அதிகரிக்கும்.

மீன்

மீன்

மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மூளையில் டோபமைன் அளவை அதிகரித்து, உணர்ச்சிகளைத் தூண்டும். எனவே நீங்கள் உங்கள் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்ட ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள PEA உற்சாகமாக மற்றும் மகிழ்ச்சியாக உணர வைக்கும். இந்த பொருள் சாக்லேட்டிலும் உள்ளது. இது உடலினுள் நல்ல மனநிலையை உணர வைக்கும் கெமிக்கல்களை வெளியிட உதவும். அதுமட்டுமின்றி, ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும்.

சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதைகளில் ஆற்றல் அதிகம் உள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் ஆற்றல் மற்றும் ஸ்டாமினா நீண்ட நேரம் தக்க வைக்கப்படும்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஜாதிக்காய் தலைவலி, வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் இரத்த ஓட்ட பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் பொருள். இத்தகைய ஜாதிக்காயில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை பிறப்புறுப்புப் பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் பாலியல் வாழ்க்கையில் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணி ஓர் நேச்சுரல் வயாகரா. இதனை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்கள் ரிலாக்ஸ் அடைந்து, இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் இதனை உறவில் ஈடுபடும் முன் உட்கொண்டால், இதில் உள்ள சிட்ருலின், மனநிலையை மேம்படுத்தி உடலுறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

பட்டை

பட்டை

பட்டை சளி, இருமல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கப் பயன்படுத்தப்படும் ஓர் மூலிகைப் பொருள். இது பல் வலி, தசைப் பிடிப்பு, சரும நோய்களுக்கும் நல்ல சிகிச்சையளிக்கும். பட்டையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலுணர்வை தூண்டும்.

பால்

பால்

பாலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கால்சியம் பெண்கள் கருவுற மிகவும் அத்தியாவசியமானது. மேலும் இது பெண்களின் ஓவுலேசன் சுழற்சியை சீராக பராமரிக்க உதவும். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகவும் பருகக்கூடாது. இல்லாவிட்டால் அது உடல் பருமனை உண்டாக்கிவிடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை கருவுறுதலை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான எண்ணெய்கள். இந்த மோனோஅன்சாச்சுரேட்டட் எண்ணெய்களில் உடலினுள் உள்ள அழற்சிகளைக் குறைக்கும் மற்றும் அதில் உள்ள கொழுப்புக்கள், கருவுற உதவி புரியும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு அவசியமானவை.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து ஜூஸ் போட்டு குடித்து வர, உடலில் தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் அதிகரித்து, பாலியல் உறவில் சிறப்பாக செயல்படலாம்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையிலும் மீனுக்கு இணையாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும். மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, படுக்கையில் முழு இன்பத்தைக் காண உதவும்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட் கருவுற உதவுவதோடு, பாலுறவில் பேரின்பம் காண உதவும்.

ஒயின்

ஒயின்

ஒயின் இதய நோய் வரும் வாய்ப்பைக் குறைப்பதோடு, சரும அழகை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள்ளு ஒன்று. இத்தகைய ஒயின் பிறப்புறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்தது, பாலுணர்வைத் தூண்டி, உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தைக் காண உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Libido Boosting Foods For Intercourse, Longer Erection & Fertility

Certain foods are aphrodisiacs and can help improve your sex life. Here are some foods that can improve your sex life. Read on to know more.
Story first published: Wednesday, April 6, 2016, 10:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter