For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சாப்பிடும் ஸ்நேக்ஸ் வைத்து உங்கள் ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும் ...எப்படி தெரியுமா?

By Hemalatha
|

நாம் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்கிறோம்? நச்சு பாய்ந்த விளை நிலத்தை, ரசாயனம் மிக்க உணவுப் பொருட்களை, மாசு நிறைந்த காற்றை, நீரில்லா குளங்களை. நமக்கு நம் தாத்தாக்கள் செய்ததை நம் பிள்ளைகளுக்கு செய்ய தவறுகிறோம்.

Importance of healthy snacks

இப்போது தினமும் நாம் செய்து கொண்டிருக்கும் மோசமான செயல் என்ன தெரியுமா? குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை முழுவதும் மாற்றியது.

அவர்களுக்கு பிடிக்கிறது என்று உருளை சிப்ஸ், ஃபிங்கர் சிப்ஸ், பீஸா, சிக்கன் ரோல் என அவர்களின் உடலில் நடக்கும் நுட்பங்களை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறோம். சிறிய வயதிலேயே அவர்களை நோய்களுக்கு தள்ள முயற்சிக்கிறோம். இது முற்றிலும் உண்மை.

கடைகளில் விற்கும் பொறித்த மற்றும் பேக் செய்யப்படும் அனைத்து வகை உணவுகளிலும் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் கலக்குகிறார்கள்.

இவை எந்த அளவுக்கு உடல் உறுப்புகளுக்கு கேடு விளைவிக்கும் என நீங்கள் நினைப்பதுண்டா? அவற்றை சாப்பிடும் ஒவ்வொரு துண்டும் விஷம் என்பதை உங்கள் குழந்தைகள் சாப்பிடும்போது உணர்ந்தால், நீங்கள் இனி வாங்கித் தரமாட்டீர்கள்.

அந்த காலங்களில் வாரம் ஒரு முறை வயிற்றை சுத்தப்படுத்த விளக்கெண்ணெய், இயற்கையான காய்கறிகள், பழங்கள், வீட்டில் செய்யப்படும் பலகாரங்கள், சீடை முறுக்கு என ஆரோக்கியமன உணவுகளையே சாப்பிட்டார்கள். விளைவு, இப்போதும் 70 வயது முதியவர்கள் நன்றாக சுறுசுறுப்பாக இருப்பதை காண்கிறோம்.

குழந்தைகளுக்கு நல்ல திண்பண்ண்டங்களை நீங்கள் அறிமுகப்படுத்துங்கள். வயிறு நிறையும் வரைதான் திண்பண்டங்கள் மீது நாட்டம் போகும். அதன்பின் அவர்களுக்கு கடைகளில் விற்கும் உணவுப் பண்டங்கள் மீது ஆசையே வராது.

ஆரோக்கியமற்ற உணவுகள் :

முன்பே சொன்னது போல், பொறித்த சிப்ஸ் வகைகள், பேக் செய்து விற்கும் திண்பண்டங்கள், கார்பனேட்டட், கூல்டிரிங்க்ஸ்,ஆகியய்வை உடலுக்கு கேடுதான் தரும்.

ஆரோக்கியமான உணவுகள் :

பொறித்த தின்பண்டங்கள் :

சுத்தமான எண்ணெயில் செய்யப்படும் முறுக்கு, சீடை, மற்றும் மிக்ஸர், இது போன்ற திண்பண்டங்களை மாதம் ஒரு முறை செய்து டப்பாவில் போட்டு வைத்தால், மாலை வேளைகளில் தரலாம். உடலுக்கு பாதிப்பு தராது. வாழைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்களில் செய்யப்படும் பஜ்ஜி, பக்கோடா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் அப்பப்போ செய்து தரலாம்.

இனிப்பு வகைகள்:

கோதுமை மற்றும் முட்டையில் கேக் செய்து தரலாம். பர்ஃபி, சத்துமாவு, கடலை உருண்டை, பொறி உருண்டை ஆகியவற்றை குழந்தைகள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இவற்றை நீங்கள் தினம் தினம் செய்ய வேண்டியது என்றில்லை. 15 நாட்களுக்கு அல்லது மாதம் ஒரு முறை செய்து, தேவைப்படும்போது தரலாம்.

தானியங்கள் :

கொண்டைகடலை, பட்டாணி போன்ற புரொட்டின் நிறைந்த தானியங்களில் சுண்டல் செய்து கொடுத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மக்கா சோளத்தை வேக வைத்து தரலாம். மூளை வளர்ச்சியை தூண்டும்.

காய்கறிகள் :

கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்களில் சேலட் செய்து தரலாம். கொழுப்புகள் உடலில் சேராது. நிறைய நார்சத்து இருப்பதால் இதயம் பலப்படும்.

பழங்கள் :

நிறைய பழங்கள் சாப்பிடுவதை உங்கள் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

குழந்தைகள் ஈரமான மண்போலதான். எப்படி பிடிக்கிறீர்களோ அப்படி இறுகுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பது தவறில்லை. உடலுக்கு எது தேவையோ அதை மட்டும் தாருங்கள். மற்றதெல்லாம் தேவையில்லாத கழிவுகளுக்கு சமம்.

English summary

Importance of healthy snacks

Importance of healthy snacks
Desktop Bottom Promotion