பற்களைத் துலக்கும் போது ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

வாய் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. வாயில் ஏதேனும் நோய்தொற்றுகள் என்றால், அதனால் உடலினுள் கிருமிகள் வேகமாக நுழையக் கூடும். எனவே ஒருவர் தங்களின் வாய் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறையைக் காட்ட வேண்டும்.

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கான வேறுசில காரணங்கள்!

அதிலும் பற்களைத் துலக்கும் போது உங்களுக்கு ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? அப்படியெனில் அது ஈறு நோய்க்கான அறிகுறியாக இருக்க முடியும். எனவே ஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டால், சில நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள். ஏனெனில் அந்த உணவுப் பொருட்கள் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களை தடுப்பதற்கான 17 இயற்கை வைத்தியங்கள்!!!

இங்கு ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும் போது கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை உட்கொண்டு வந்தால், ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு

ஆரஞ்சு

உடலில் வைட்டமின் சி குறைபாட்டினாலும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். எனவே வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஆப்ரிக்காட்

ஆப்ரிக்காட்

வைட்டமின் ஏ குறைபாடும் வாய்ப்புண், ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆப்ரிக்காட் பழத்தில் பீட்டா-கரோட்டீன் அளவுக்கு அதிகமாக உள்ளது. இது உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்படும். எனவே ஆப்ரிக்காட் பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

பால்

பால்

பற்களின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது. இத்தகைய கால்சியம் பாலில் அதிகம் உள்ளது. எனவே தினமும் தவறாமல் 2 டம்ளர் பால் குடியுங்கள். இதனால் ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.

கேரட்

கேரட்

கேரட்டிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அத்தகைய கேரட்டை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக கடித்து நன்கு மென்று சாப்பிட்டால், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் ஈறுகளில் இரத்தம் கசிவது தடுக்கப்படும். ஏனெனில் இவற்றில் வைட்டமின் சி, ஏ போன்றவை அதிகம் உள்ளது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் வாயில் உள்ள அமிலத்தன்மையை சீராக பராமரிக்க உதவும். வாயில் அமிலத்தன்மை அதிகமானால், அதனால் பற்கள் மற்றும் ஈறுகள் தான் முதலில் பாதிக்கப்படும். எனவே வெள்ளரிக்காயை சாப்பிட்டு வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், எலுமிச்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடலில் வைட்டமின் சி குறைபாட்டினைத் தடுத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் செய்ய முடியும்.

சாலட்

சாலட்

ஈறுகளில் இரத்தக்கசிவு உள்ளவர்கள், தினமும் ஒரு பௌல் பச்சை காய்கறி சாலட் சாப்பிடுவதன் மூலம், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது குறையும்.

கிரான்பெர்ரி பழங்கள்

கிரான்பெர்ரி பழங்கள்

கிரான்பெர்ரி பழங்களும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை நிறுத்த உதவும். ஏனெனில் கிரான்பெர்ரி பழங்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. இது வாயில் உள்ள அதிகப்படியான பாக்டீரியாக்களை அழிக்கும். எனவே இப்பழம் கிடைத்தாலோ அல்லது ஜூஸ் கிடைத்தாலோ, வாங்கிப் பருகுங்கள்.

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் பருகுவதன் மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாய் ஆரோக்கியமும் அதிகரிக்கும். குறிப்பாக ஈறுகளில் இரத்தம் கசிபவர்கள், இந்த ஜூஸைக் குடித்தால், இரத்தக்கசிவு உடனே நிற்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கி, உடலும் நன்கு சுத்தமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

செட்டிநாடு அதிரசம் இப்ப உங்களுக்காக ஆன்லைனில்..

English summary

Foods You Must Eat To Prevent Bleeding Gums

Bleeding gums could be an indication of a periodontal or gum disease and should be taken care of right away. Here are some foods you must eat to prevent bleeding gums. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter