ஆண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் டாப் 10 உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் பெண்களை விட அனைத்து வகையிலும் வித்தியாசமானவர்கள். பெண்களை விட ஆண்கள் அதிகப்படியான உடல்நல கோளாறுகளால் அவஸ்தைப்படுவார்கள். எனவே ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க அன்றாடம் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டியது அவசியம்.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்!!!

ஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவும். அந்த உணவுகளை ஆண்கள் அடிக்கடி தங்களது டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் சீர்கேடு அடைவதைத் தடுக்கலாம்.

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்...

இங்கு ஆண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அடிக்கடி உட்கொண்டு வந்தால், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடல் சிப்பி

கடல் சிப்பி

கடல் சிப்பியில் ஜிங்க் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் தாதுப்பொருள் உள்ளது. இந்த ஜிங்க் உடலில் நூற்றுக்கணக்கான செயல்பாடுகளில் ஈடுபடும்.

அதில் செல்லுலார் பாதிப்பு ஏற்படுவதைத் தடுத்து, புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைப்பதில் இருந்து, ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

ஆண்களுக்கு வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான ஓர் உணவுப்பொருள். இதனை உட்கொண்டால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைப்பதோடு, அதில் உள்ள பொட்டாசியம் நரம்புகள், இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்துக் கொள்ளும். மேலும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், பக்கவாதம் வரும் அபாயத்தையும் குறைக்கும்.

வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, இரத்த சிவப்பணுக்களின் உதவியுடன், நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ளும். ஆகவே தவறாமல் தினமும் வாழைப்பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

மீன்

மீன்

ஆண்களுக்கான சூப்பர் உணவுகள் பட்டியலில் மீனும் முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயம், இரத்த ஓட்டம், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே ஆண்கள் சிக்கன், மட்டனை அதிகம் உண்பதற்கு பதிலாக, அடிக்கடி மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால், நோய்வாய்ப்படுவதில் இருந்து விடுபடலாம்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன், பொட்டாசியம் மற்றும் சல்ஃபோராஃபேன் என்னும் பைட்டோகெமிக்கல் உள்ளது. இவைகள் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் சக்தி வாய்ந்த உட்பொருட்கள். சமீபத்தில் ஹார்வார்டு ஆய்வு ஒன்றில், ப்ராக்கோலியை ஒருவாரம் உட்கொண்டு வந்ததில், ப்ராக்கோலியை உட்கொண்டு வராதவர்களை விட, இவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் பாதியாக குறைந்திருப்பது தெரிய வந்தது.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸில் மக்னீசியம் மற்றம் செலினியம் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை இதய நோய்கள், புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கும். செலினியம் கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, இரத்தம் உறைந்து, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே இந்த பிரேசில் நட்ஸை ஸ்நாக்ஸ் நேரத்தில் சிறிது உட்கொண்டு வருவது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

திராட்சை

திராட்சை

உடற்பயிற்சிக்குப் பின் அதிகப்படியான கிளைசீமிக் கார்ப்ஸ் உள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் அதிகளவு கிளைக்கோஜன் உற்பத்தி செய்யப்பபடும். திராட்சையில் கிளைசீமிக் அதிகம் உள்ளது.

ஆகவே இதனை உடற்பயிற்சிக்குப் பின் ஆண்கள் உட்கொண்டு வருவது நல்லது. மேலும் திராட்சையில் வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, மற்றும் ஃபோலேட் மட்டுமின்றி, அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது.

கிவி

கிவி

கிவி பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களை நீர்க்கச் செய்து, உடற்செல்கள் பாதிக்கப்படுவது மற்றும் உட்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதய நோய்கள், புற்றுநோய் வரும் அபாயமும் குறையும்.

மேலும் கிவி பழம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்படுத்தி, இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதையும் தடுக்கும்.

லிச்சி

லிச்சி

பிங்க் நிறத்தில் சிறியதாக இருக்கும் லிச்சி பழம் தற்போது மார்கெட்டுகளில் கிடைக்கிறது. இதனை ஆண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இப்பழத்தில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது உடலியக்கத்தை சீராக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். மேலும் இப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உட்பொருட்களும் உள்ளது.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் உள்ள அர்ஜினைன் என்னும் நொதி, ஆண் இனப்பெருக்க மண்டலத்தில், இரத்த ஓட்டத்தை தூண்டிவிடும். ஆகவே ஆண்களே படுக்கையில் சிறப்பாக செயல்பட நினைத்தால், பப்பாளியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

மாம்பழ விதை

மாம்பழ விதை

மாம்பழத்தின் விதையை பொடி செய்து, அதனை ஆண்கள் அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறைந்து, இதய நோய் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Defend Men’s Health

A healthy diet is necessary for optimal health, but there are specific foods that men should include in their diet. Here’s a list of fruits that defend men’s health.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter