உடலுறவின் போது எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது, உங்களால் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடியவில்லையா? உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் மிகுந்த சிரமத்தை உணர்கிறீர்களா? வெளியே சொல்ல கூச்சமாக உள்ளதா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்தை அடையமலிருப்பது, துணையின் முன் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் அது உறவையே முறித்துவிடும். ஆகவே பாலியல் உறவில் தம்பதிகள் சற்று மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

சரி, இப்போது உடலுறவின் போது எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் உணவுகள் எவையென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு

ஆரஞ்சு

உச்சக்கட்ட இன்பத்தை எளிதில் அடைய உதவும் உணவுகளில் ஒன்று ஆரஞ்சு. இதற்கு ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி தான் காரணம். இது தான் இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, எளிதில் உச்சக்கட்ட இன்பத்தைக் காண உதவும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் குறிப்பிட்ட செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டி, உடலுறவின் போது முழு இன்பத்தையும் அனுபவிக்க உதவும். ஆகவே சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டை

முட்டை

முட்டையும் எளிதில் இன்பத்தை அடைய உதவும். முட்டையில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் புரோட்டீன், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி சாப்பிட்டால், இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலுறவின் போது வேகமாக உச்சக்கட்ட இன்பத்தைக் காண உதவும்.

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, அந்தரங்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க உதவும்.

நட்ஸ்

நட்ஸ்

ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை சாப்பிடாமல், நட்ஸ் சாப்பிடுங்கள். நட்ஸ்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலின் வெப்பத்தை தூண்டி, உடலுறவில் சிறப்பாக செயல்பட செய்து, வேகமாக உச்சக்கட்ட இன்பத்தைக் காண உதவும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், மன அழுத்தத்தினால் டென்சனாக இருக்கும் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, உடலுறவின் போது முழு இன்பத்தை அனுபவிக்க உதவும். ஆகவே அவ்வப்போது டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Common Foods That Help You Have Amazing Orgasms!

Want to have better orgasms naturally? Here is a list of foods for better orgasm that you must try..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter