உடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருந்தால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொதுவாக வெயில் காலத்தில் மற்றும் உடற்பயிற்சி செய்த பின் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இப்படி உடலில் வெப்பம் அதிகமானால், முகத்தில் பருக்கள், அரிப்புகள், குமட்டல், வெப்ப தசைப்பிடிப்பு மற்றும் உயிருக்கே உலை வைக்கும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

தற்போது பலரும் தங்களின் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஜிம் செல்கிறார்கள். குறிப்பாக ஆண்கள் தான் அதிகம் செல்கிறார்கள். அப்படி ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து முடித்த பின், உடலைக் குளிர்ச்சியாக்க தண்ணீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலின் வெப்பம் தணிவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

ஜிம் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

அதுமட்டுமின்றி, தற்போது காலநிலை கூட மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. சரி, இப்போது உடலின் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது அனைவரும் அறிந்ததே. அத்தகைய தர்பூசணியை தினமும் ஒரு பௌல் சாப்பிட்டு வந்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியினால் வெப்பமடைந்த உடலும் குளிர்ச்சியுடன் இருக்கும்.

முலாம் பழம்

முலாம் பழம்

முலாம் பழம் கூட உடலின் வெப்பத்தை தணிக்கும் அருமையான உணவுப் பொருள். எனவே உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், முலாம் பழ ஜூஸை குடித்து வருவது, உடல் வெப்பத்தை குறைத்து, நீர்ச்சத்தை அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

தினமும் வெள்ளரிக்காய் சாலட் சாப்பிட்டு வாருங்கள். இதனால் நிச்சயம் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

புதினா

புதினா

புதினா குளிர்ச்சித்தன்மை மிக்கது. எனவே அத்தகைய புதினாவை ஜூஸில் சேர்த்தோ அல்லது சட்னி செய்தோ அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடல் வெப்பம் குறையும்.

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கியில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல்சூடு பிடித்திருந்தால், முள்ளங்கி சாம்பார் செய்து சாப்பிடுங்கள். இதனால் உடல் வெப்பம் தணியும்.

வெந்தயம்

வெந்தயம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி செய்ல் வந்தால், உடல் சூடு குறையும்.

சோம்பு

சோம்பு

சோம்பை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.

இளநீர்

இளநீர்

அனைவருக்குமே இது தெரிந்தது தான். காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறைவதோடு, அல்சர் பிரச்சனை இருந்தாலும் நீங்கும்.

மாதுளை

மாதுளை

உடல் சூடு பிடித்திருந்தால், தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும்.

பால்

பால்

பாலில் சிறிது தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், நாள் முழுவதும் குளிர்ச்சியுடன் செயல்பட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cooling Foods To Eat Post Workout

Some foods reduce body heat. When the climate is hot, or even your body temperature is high it is better to consume foods lower body heat.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter