நுரையீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

மூளையைப் போன்றே நுரையீரலும் நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருக்கிறது. நுரையீரலின் முக்கிய பணி உடலுக்கு ஆக்ஸிஜனை செலுத்துவது தான். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், அழுக்குகள் மற்றும் இதர நுண்ணுயிரிகள் உடலினுள் நுழைந்து, நுரையீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

அதுமட்டுமின்றி, சிகரெட்டை பிடித்து அதனால் நுரையீரல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இவற்றைத் தவிர்த்து, நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமானால், ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம். அப்படி சேர்ப்பதன் மூலம் நுரையீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டுவிடும்.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

சரி, இப்போது நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் என்னவென்று பார்ப்போம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, கேல்

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, கேல்

இந்த காய்கறிகள் நுரையீரலை சுத்தம் செய்ய உதவும். ஏனெனில் இந்த காய்கறிகளில் சல்பர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இவற்றை அடிக்கடி உட்கொள்ளும் போது, நுரையீரல் மற்றும் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறிவிடும். ஆகவே உங்கள் நுரையீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இந்த காய்கறிகளை வாரத்திற்கு 3 முறையாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.

கரோட்டினாய்டு உணவுகள்

கரோட்டினாய்டு உணவுகள்

கேரட், குடைமிளகாய் போன்றவற்றில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இது உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறும். மேலும் வைட்டமின் ஏ ஆஸ்துமா பிரச்சனையை சரிசெய்வதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டு, உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒமேகா-3 உணவுகள்

ஒமேகா-3 உணவுகள்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் சுவாச மண்டலத்திற்கு மிகவும் நல்லது. உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் இருந்தால், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன், வால்நட்ஸ், ஆளி விதை போன்றவற்றை உட்கொண்டு வாருங்கள். இதனால் சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவற்றில் இருந்து விரைவில் குணமாகலாம்.

ஃபோலேட் உணவுகள்

ஃபோலேட் உணவுகள்

ஃபோலேட் நிறைந்த உணவுகள் நுரையீரல் புற்றுநோயில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், ஃபோலேட் உணவுகளான அஸ்பாரகஸ், பசலைக்கீரை, பீட்ரூட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வாருங்கள். இதனால் நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.

பூண்டு

பூண்டு

உணவுப் பொருட்களிலேயே பூண்டை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஏனெனில் இதில் மற்ற காய்கறிகளை விட ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்திருப்பதோடு, சொல்ல முடியாத அளவில் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. எனவே உங்களின் நுரையீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால் பூண்டை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகள், நுரையீரலானது மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை எவ்வித தடையுமில்லாமல் அனுப்ப உதவும். இத்தகைய வைட்டமின் சி சத்தானது, சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சையிலும், குடைமிளகாயிலும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுகளை அடிக்கடி அதிகம் உட்கொண்டு வந்து, உங்கள் நுரையீரலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Lung Cleansing Superfoods

Our lungs are exposed to everyday stress, pollution and toxins. you can detoxify your lungs by simply eating these superfoods.
Story first published: Tuesday, December 22, 2015, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter