இனிமேல் சத்து அதிகம் நிறைந்த இந்த உணவுகளின் தோலைத் தூக்கி போடாதீங்க...

Posted By: Aruna Saravanan
Subscribe to Boldsky

உணவே மருந்து தான், இருப்பினும் பல உணவுகளைப் பற்றி அறியாமலே நாம் அவற்றை தூக்கி வீசி விடுகின்றோம். அவற்றை ஆரோக்கியமற்றது என்று நினைத்து தூக்கி வீசுகின்றோம். அதைப் பற்றி அறிந்து கொள்ள கூட நாம் முயற்சிப்பது இல்லை.

ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இந்தியாவில் பெரும்பாலும் உண்ணும் உணவின் மகத்துவம் தெரியாமல் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இதன் அருமையை உணர்ந்து நாம் தூக்கி வீசும் உணவுகளை ஆராய்ந்து உண்டு மகிழ்கின்றனர். இதனால் அவர்களின் உடல் மினுமினுப்புடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படுகின்றது.

வாழைப்பழ தோலில் இம்புட்டு விஷயமா? அவிழ்த்துவிட்ட அமெரிக்க ஆய்வாளர்கள்!!

காய் மற்றும் பழங்களின் தோல் மற்றும் விதைகளில் பலவித நன்மைகள் உள்ளது. இதை படித்த பின்பு இவ்வளவு நாட்களும் எப்படி இவற்றை வீண் அடித்தோம் என்று நினைப்பீர்கள். அத்தகைய நல்ல ஆரோக்கிய உணவுகளைப் பற்றி இங்கு காண்போம். இவற்றை நீங்கள் அப்படியே சாப்பிட வேண்டும் என்று இல்லை. ஜூஸாகவோ அல்லது வேறு நமக்கு பிடித்த விதத்தில் கூட சாப்பிடலாம்.

ஆரஞ்சு பழத்தின் தோலில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு தோல்

உருளைக்கிழங்கு தோல்

உருளைக்கிழங்கு தோலில் எவ்வளவு சத்து உள்ளதை யாரும் அறிவதில்லை. உருளைக்கிழங்கின் மேட்புறத் தோலில் அதிக அளவில் நார்சத்து உள்ளது. இதோடு மட்டுமில்லாமல் இதில் கால்சியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் இதை சமைக்கும் முன் நன்றாக கழுவி பின் சமைத்தல் அவசியம்.

ப்ராக்கோலியின் இலைகளும், காம்புகளும்

ப்ராக்கோலியின் இலைகளும், காம்புகளும்

ப்ராக்கோலியின் இலைகளில் அதிக அளவில் கரோடினாய்ட்டுகள் உள்ளது மற்றும் புற்றுநோயை தவிர்க்கும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதை இதன் இலைகளுடனும் காம்புகலுடன் சேர்த்து சமைத்தல் வேண்டும். இதை கொண்டு சூப், ஜூஸ் அல்லது எளிமையான வறுவல் போன்றவற்றையும் சமைக்க முடியும்.

வெங்காயத் தோல் மற்றும் பூண்டு பட்டை

வெங்காயத் தோல் மற்றும் பூண்டு பட்டை

வெங்காயத் தோல் மற்றும் பூண்டு பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உள்ளன. உடல் வீக்கத்தை கட்டுப்படுத்தவும், ஒவ்வாமையை குணப்படுத்தவும் இது பயன்படுகின்றது. இதை சமைக்கும் போது சேர்த்து, பின் பரிமாறும் போது எடுத்து விடவும். இதனால் உங்கள் உணவு மேலும் ஊட்டச்சத்து உடையதாக அமைகின்றது. இதை தூக்கிப் போடுவதால் சத்து மிக்க உணவை வீணாக்குகின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

டர்னிப் மற்றும் கேரட் இலை

டர்னிப் மற்றும் கேரட் இலை

டர்னிப் மர்றும் கேரட் இலையில் கால்சியம், மக்னிசியம், நியாசின், வைட்டமின் பி மற்றும் கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. அதோடு இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் புற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தி உடலுக்கு கிடைப்பதுடன் வலுவான எலும்புகளைப் பெறவும் உதவுகின்றது.

தர்பூசணியின் வெள்ளைப்பகுதி

தர்பூசணியின் வெள்ளைப்பகுதி

தர்பூசணியின் வெள்ளைப்பகுதியில் சிட்ரோனெல்லா என்ற சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள அமினோ அமிலம் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகின்றது. ஆகையால் சர்க்கரை நோய்க்கும், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது.

கிவி பழத்தின் தோல்

கிவி பழத்தின் தோல்

கிவி பழத்தின் தோலுக்கு அதிக அளவில் சத்து உள்ளது. இது தெரியாமல் நாம் தூக்கி போட்டு விடுகின்றோம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி இருப்பதுடன் புற்றுநோய் வராமல் காக்கவும் உதவுகின்றது. இதை ஜூஸாகவும் அருந்தலாம். அதாவது பழத்துடன் தோலையும் சேர்த்து அரைத்து பருகலாம்.

செலரி இலை

செலரி இலை

செலரி தண்டுகளை விட அதன் இலைகளில் அதிக அளவில் சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கின்றது. உயர் ரத்த அழுத்தத்தைப் போக்கக் கூடிய இந்த இலை புற்றுநோய் வராமலும் பாதுகாக்கும்.

தர்பூசணி விதை

தர்பூசணி விதை

இதை படித்த பின்பாவது தர்பூசணியின் விதையை தூக்கி எறிந்து விடாதீர்கள். இவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. அதோடு, காப்பர், மக்னீஷியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் மலட்டுத்தன்மையை போக்கும். இதயத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும் இந்த விதையை இனியாவது வீணாக்காமல் உண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Attention! Never Throw These Super Healthy Food Parts

You throw food parts that are super healthy. Know the food parts which we throw but are actually healthy.
Story first published: Sunday, December 20, 2015, 9:45 [IST]