Latest Updates
-
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா?
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவமான பலமும், பலவீனமும் இருக்கும். அனைவரிடமும் சில நல்ல குணங்களும், சில தீய குணங்களும் இருக்கும், ஆனால் சில ராசிகளில் பிறந்தவர்களிடம் மற்றவர்களை விட நேர்மறையான குணங்கள் அதிகமாக இருக்கும். அவர்கள் தூய்மையான இதயம் கொண்டவர்களாகவும், உலகில் நேர்மறை ஆற்றலை பரப்புபவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பொதுவாக அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டுமென்று விரும்புபவர்களாகவும், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று உண்மையாக விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பொதுவாக அனைவருக்கும் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் அழகான இதயமும், தூய்மையான எண்ணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள், அக்கறையுள்ளவர்களாகவும், கருணையுள்ளவர்களாகவும், மற்றவர்களை புரிந்துகொள்ளும் குணம் கொண்டவர்களாகவும், இருப்பார்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களின் நல்வாழ்வில் அவர்களுக்கு இருக்கும் உண்மையான அக்கறை அவர்களை இயற்கையான பராமரிப்பாளர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் மாற்றுகிறது. அவர்கள் மற்றவர்களுடன் பச்சாதாபம் கொள்ளும் உள்ளார்ந்த திறனை இயற்கையாகவே கொண்டுள்ளனர். நீங்கள் ஆறுதலையும், அக்கறையையும் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் கடக ராசிக்காரர்களிடம்தான் செல்ல வேண்டும்.
மீனம்
குருபகவானால் ஆளப்படும் மீன ராசிக்காரர்கள் மிகவும் பச்சாதாபம் கொண்டவர்களாகவும், உணர்திறன் மிக்கவர்களாகவும், மனித உணர்வுகளை எளிதில் ஆழமாகப் புரிந்துகொள்பவர்களாகவும் உள்ளனர். அவர்களின் இரக்க குணமே அவர்களின் இதயத்தை தூய்மையானதாக மாற்றுகிறது, மேலும் மற்றவர்களுக்கு உதவத் தூண்டுகிறது. மற்றவர்களுக்கு உதவ பெரும்பாலும் அவர்களின் தேவைகளை தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். உங்களை உண்மையிலேயே புரிந்துகொண்டு, முழு மனதுடன் உதவும் ஒரு நண்பரை நீங்கள் தேடினால் மீனா ராசிக்காரர்கள்தான் அதற்கு சரியானவர்கள்.
கன்னி
கிரகங்களின் இளவரசரான புதன் கிரகத்தால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்கு அமைதியாகவும், ஒதுக்கப்பட்டவர்களாகவும் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் கனிவான மற்றும் அக்கறையுள்ள இதயத்தைக் கொண்டவர்கள். அவர்கள் புத்திக்கூர்மைக் கொண்டவர்கள் மற்றும் விவரங்களுக்கு வலுவான கவனம் செலுத்துபவர்கள். அவர்களின் தன்னலமற்ற தன்மை அவர்களின் உதவி தேவைப்படுபவர்களுக்கு சரியான உதவிகளை வழங்கத் தூண்டுகிறது, மேலும் பெரும்பாலும் மற்றவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய தங்கள் திறனை பயன்படுத்தி அனைத்தையும் செய்வார்கள், தங்கள் எல்லையை கடந்தும் செய்வார்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு சரியான வழிகாட்டுதலையும், நடைமுறை தீர்வுகளையும் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் கன்னி ராசிக்காரர்களை நோக்கிதான் ஓட வேண்டும்.
துலாம்
காதல் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள் ஒற்றுமை மற்றும் சமநிலையின் மீதான ஆழ்ந்த விருப்பத்தால், ராசி சக்கரத்தின் அமைதி காப்பாளர்களாக இருக்கிறார்கள். மக்களைத் தங்களை நோக்கி ஈர்க்கும் இயல்பான வசீகரமும், திறனும் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஒரு சூழலின் இரு பக்கங்களையும் நுட்பமாகப் புரிந்துகொள்வதில் அவர்கள் வல்லவர்கள்; இதுவே அவர்களை நம்பிக்கைக்குரிய நண்பர்களாக மாற்றுகிறது. உங்களிடமும், மற்றவர்களிடமும் உள்ள நேர்மறையான குணங்களை மட்டுமே எப்போதும் பார்க்கும் ஒரு நபர் உங்களுக்குத் தேவைப்பட்டால், துலாம் ராசிக்காரர்கள்தான் அதற்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












