பலரும் கேள்விப்பட்டிராத ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய பழங்களின் தோல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பழங்களை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்று சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொரு பழத்திலும் ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பழங்களின் தோல்களிலும் நன்மைகள் நிறைந்துள்ளது.

பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது.

கட்டாயம் தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

இங்கு அப்படி அளவில்லா ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய பழங்களின் தோல்களும், அதன் ஆரோக்கிய நன்மைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் சில உங்களை ஆச்சரியப்படக்கூடியவாறு இருக்கும். அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். அதுமட்டுமின்றி ஆரஞ்சு பழத்தின் தோல் வாய் துர்நாள்ளம், சுவாச பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போனற்வற்றிற்கு சிறந்த நிவாரணத்தை வழங்கும். முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழ தோல்

வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும். அதுமட்டுமின்றி, சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்யவும் வாழைப்பழத்தின் தோல் உதவும். மேலும் குதிகால் வெடிப்பு உள்ளவர்கள், வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து வந்தால், ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பு மறைந்துவிடும்.

மாதுளை தோல்

மாதுளை தோல்

மாதுளையின் உட்பகுதியில் உள்ள சிவப்பு நிற முத்துக்களில் எவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளதோ, அதேப் போல் அதன் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதில் பருக்கள், சரும அரிப்புகள், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கி அழகு பாதுகாக்கப்படுவதோடு, இதய நோய், தொண்டைப் புண் போன்றவை தடுக்கப்பட்டு, எலும்புகளின் ஆரோக்கியம், பற்களின் சுகாதாரம் போன்றவை மேம்படும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த வெள்ளைப் பகுதியானது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். மேலும் இந்த வெள்ளைப்பகுதியை சருமத்தில் தேய்த்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். வெள்ளரிக்காயின் தோலில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே உள்ளது. இவை எலும்புகளின் ஆரோக்கியம், இரத்தம் உறைதல் மற்றும் பார்வையை மேம்படுத்தும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளின் தோலில் உள்ள ப்ளேவோனாய்டுகள், புற்றுநோய் செல்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் ஆப்பிளின் மேதலில் உள்ள அர்சோலிக் ஆசிட், உடல் பருமனைக் குறைத்து, தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுத்து, உடலைப் பாதுகாக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையின் தோலுக்கும் உடல் எடையைக் குறைக்கும் சக்தி உள்ளது. மேலும் இது வாய் பிரச்சனைகளான இரத்த கசிவு, பல் சொல்த்தை போன்றவற்றைத் தடுக்கும் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். முக்கியமாக எலுமிச்சையின் தோல் கூட, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Fruit Peels That Have Amazing Health Benefits

Fruits are a storehouse of nutrients that render myriad health and beauty benefits. However like the fruit, the peel too has lots to offer. Here are some surprising health benefits of 7 fruit peels.
Subscribe Newsletter