வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்கும் 10 சத்தான உணவுகள்!!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

'நாம் உழைப்பது எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தானே!' என்று சொல்வார்கள். நம் உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்று வயிறு ஆகும். நமக்குப் பசி எடுக்கும் போது இந்த வயிறு தான் கூப்பாடு போட்டு நம்மைச் சாப்பிட வைக்கும்.

நம் உடலில், செரிமான உறுப்புக்களின் நடு நாயகமாக இருக்கும் வயிறு மிகவும் சென்ஸிட்டிவ்வானதும் கூட! சரியான உணவு வயிற்றுக்குள் போகவில்லை என்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய்விடும். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மூலம் நம் வயிற்றை சிறப்பாகப் பராமரிக்கலாம்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!

இவற்றில் நாம் இப்போது உணவுக் கட்டுப்பாட்டைப் பற்றி மட்டும் பார்க்கப் போகிறோம். நம் வயிற்றுக்கும், அதன் ஆரோக்கியத்திற்கும், மற்றும் செரிமானத்திற்கும் உதவும் 10 சத்தான உணவுகள் குறித்த விவரம் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்

தயிர்

நம் வயிற்றில் உள்ள பல கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் தான் நாம் சாப்பிடும் உணவைச் சரியான முறையில் செரிக்க வைக்கின்றன. தயிரில் சத்துள்ள பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதால், அது வயிற்றுக்கு மிகவும் நல்லது.

கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி

கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி

கொழுப்பு மிகவும் குறைவாக இருக்கும் இறைச்சி வகைகளை வயிற்றுக்குள் தள்ளினால் அது சந்தோஷமாக இருக்கும். ஆனால் அதிகக் கொழுப்புக்களைக் கொண்ட மாட்டு இறைச்சிகளைச் சாப்பிட்டால் வயிறு கடுப்பாகி, குடல் புற்றுநோயை உருவாக்க நேரிடும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

ஆண்டு முழுவதும் எளிதாகக் கிடைக்கும் பழங்களில் ஒன்றுதான் வாழைப்பழம். வயிற்றுக்குள் செல்லும் பல செரிக்காத உணவு வகைகளை இந்த வாழைப்பழம் நன்றாகச் செரிக்கச் செய்வதால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

வைட்டமின் சி-யும், செரிமானத்திற்குத் தேவையான நார்ச்சத்தும் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் உள்ளதால், அதைச் சாப்பிடும் போது வயிறு சுறுசுறுப்பாக இருக்கும். நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கும் ஆரஞ்சு உதவுகிறது.

தினை

தினை

தினையில் உள்ள அமினோ அமிலங்கள் நம் வயிற்றை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆகவே வாரம் ஒருமுறை தவறாமல் தினையை சாப்பிட்டு வாருங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை

நீரில் எளிதில் கரையக் கூடிய அமிலங்கள் எலுமிச்சையில் இருப்பதால், அது வயிற்றுக்கும் செரிமானத்துக்கும் மிகவும் உதவுகிறது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியை அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டால், அதைப் போன்ற செரிமான உணவு எதுவும் இருக்க முடியாது. பல வயிற்று உபாதைகளை நீக்குவதில் இஞ்சிக்கு நிகர் இஞ்சி தான்!

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், வயிற்றுக்குள் எந்தத் தொற்றுக்களையும் வர அனுமதிக்காது.

கீரை

கீரை

பெரும்பாலும் அனைத்து வகையான கீரை வகைகளுமே வயிற்றுக்கு நல்லது. தினமும் ஒரு வகைக் கீரையைச் சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனையே வராது.

கோதுமை

கோதுமை

கோதுமை வகை தானியங்களைத் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டாலும் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். அவற்றில் உள்ள நார்ச்சத்து, மாங்கனீஸ், செலினியம் ஆகியவை செரிமானத்திற்கு நல்லவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The 10 Healthiest Foods For Your Stomach

The above mentioned foods for a healthy stomach are replete with several vitamins and nutrients, all of which help to cleanse the stomach and improve digestion in the body. Let us go ahead and look at these foods to clean the stomach. These foods can also be characterized under foods to improve digestion. Here are 10 foods for your stomach. Read on...
Subscribe Newsletter