Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
ஆண்களே! 30 வயசு ஆயிடுச்சா? அப்ப இந்த உடற்பயிற்சிகளை செய்யாதீங்க..
பொதுவாக உடற்பயிற்சிகளை அந்தந்த வயதிற்கு ஏற்ப செய்ய வேண்டும். சிலர் 20-களில் செய்து வந்த உடற்பயிற்சிகளை, 30-களில் முயற்சிப்பார்கள். ஆனால் அது தவறு.
தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது நல்ல விஷயம் தான். இன்று நிறைய ஆண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை தினமும் செய்து வருகிறார்கள். அவர்களுள் சிலர் ஜிம்மிலும், இன்னும் சிலர் வீட்டிலும் செய்து வருகிறார்கள். ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் ட்ரைனரின் மேற்பார்வையில் செய்வதால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் வீட்டிலேயே செய்பவர்களுக்கு எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது சரியாக தெரியாது.

பொதுவாக உடற்பயிற்சிகளை அந்தந்த வயதிற்கு ஏற்ப செய்ய வேண்டும். சிலர் 20-களில் செய்து வந்த உடற்பயிற்சிகளை, 30-களில் முயற்சிப்பார்கள். ஆனால் அது தவறு. அப்படி செய்யும் போது அதன் விளைவாக முதுகுப் பகுதியில் உள்ள டிஸ்க்குகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் 25 வயதை எட்டும் போது டிஸ்க்குகள் வறண்டு போகத் தொடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே 30 வயதை எட்டிய ஆண்கள் ஒருசில உடற்பயிற்சிகளை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இப்போது 30 வயதுகளில் முதுகு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க ஆண்கள் எந்த உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

சிட்-அப்ஸ் (Sit-Ups)
சிட்-அப்ஸ் மிகவும் மோசமான உடற்பயிற்சி, குறிப்பாக 30 வயதுகளில் இதை செய்வது என்பது பல மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கும். ஏனெனில் சிட்-அப்ஸ் செய்யும் போது, கீழ் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் போது, அதன் விளைவாக முதுகுப் பகுதியில் உள்ள டிஸ்க் இறக்கப்படலாம். இதற்கு மாற்றாக ப்ளான்க் பயிற்சிகளை வேண்டுமானால் முயற்சிக்கலாம்.

ஹெவி டெட்லிஃப்ட் (Heavy Deadlift)
டெட்லிஃப்ட் என்பது கடினமான உடற்பயிற்சி. இதை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இதுவரை டெட்லிஃப்ட் பயிற்சி செய்ததில்லை என்றால், அதை 30 வயதுகளில் முயற்சிக்கக்கூடாது. தவறான நிலையில் டெட்லிஃப்ட் பயிற்சியை செய்யும் போது, அதன் விளைவாக இடுப்பு முதுகுத்தண்டில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பல தீவிர பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும். ஒருவேளை நீங்கள் டெட்லிஃப்ட் பயிற்சியை ஏற்கனவே செய்துள்ளீர்கள் என்றால், அந்த பயிற்சியை உடற்பயிற்சியின் இறுதியில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோர்வடைந்த தசைகளுடன் இப்பயிற்சியை செய்தால், அது மேலும் ஆபத்தை தான் ஏற்படுத்தும். எனவே இப்பயிற்சியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ரோ பயிற்சிகள் (Rows with Rotation)
ரோ பயிற்சிகளானது முதுகு தசைகளை, குறிப்பாக ரோம்பாய்டுகுளை வலுப்படுத்துவதில் சிறந்தது. ஆனால் இந்த ரோ பயிற்சிகளை செய்யும் போது, கோர் தசைகள் (வயிற்றுப் பகுதி) இறுக்கமாக இருக்க வேண்டும் மற்றும் வளைந்து கொண்டு செய்யக்கூடாது. தவறான முறையில் ரோ பயிற்சிகளை செய்தால், அதன் விளைவாக கடுமையான முதுகு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ரஸ்யன் டிவிஸ்ட் (Russian Twists)
இந்த கோர் உடற்பயிற்சியானது, உட்கார்ந்த நிலையில், ஒரு மெட் பால் அல்லது எடையைத் தூக்கிக் கொண்டு செய்யும் பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியில் உள்ள ஒரு பிரச்சனை என்றால் எடையைத் தூக்கிக் கொண்டு பக்கவாட்டில் திரும்பும் போது, இடுப்பு முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சியில் கீழ் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிக அழுத்தம் கொடுக்கும் போது, காலப்போக்கில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஓவர்ஹெட் பிரஸ்ஸஸ் (Overhead Presses)
ஓவர்ஹெட் பிரஸிங் உடற்பயிற்சிகள் மோசமானவை அல்ல. ஆனால் நீங்கள் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவரானால், இந்த பயிற்சிகளை பெரும்பாலானோரால் சரியான முறையில் செய்ய முடியாது. தவறான நிலையில் மற்றும் முறையில் இப்பயிற்சியை செய்யும் போது, அதன் விளைவாக மூட்டு வலி, முதுகு வலி மற்றும் உடலினுள் கடுமையான காயங்களை ஏற்படுத்தும்.

லெக் பிரஸ் (Leg Press)
லெக் பிரஸ் பயிற்சியை செய்ய நிறைய பேருக்கு பிடிக்கும். ஏனெனில் இதில் எடையை காலில் தூக்க வேண்டும். இருப்பினும் இந்த பயிற்சியை அதிகமாக செய்யும் போது, அதன் விளைவாக கீழே முதுகு பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு, முதுகு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே லெக் பிரஸ் செய்வதற்கு பதிலாக, ஸ்குவாட்ஸ் பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யலாம்.



Click it and Unblock the Notifications











