Just In
- 5 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 6 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 6 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 7 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை குறிவைத்தார் என நினைக்கவில்லை! சரத்பவார் அதிர்ச்சி
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அறிவியல் பூர்வமா நிரூபிக்கப்பட்ட 'இந்த' பானங்கள் உங்க உடல் எடையை வேகமா குறைக்குமாம் தெரியுமா?
எடை இழப்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல. உடல் எடையை குறைக்க பல்வேறு செயல்களை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்கத்தால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது. உங்கள் உடல் எடை அதிகரிக்க இன்னும் பல காரணங்கள் உள்ளன. எடை குறைக்க முயற்சி செய்யும்போது, உங்கள் உணவு திட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். 'நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?' மற்றும் 'நீங்கள் சாப்பிடும் உணவு' உங்கள் எடை இழப்பு திட்டங்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது. சிலர் உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். மற்றவர்கள் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் எடையை குறைக்கிறார்கள். ஆனால் பிடிவாதமான கொழுப்பை எரிக்க அனைவரும் கடினமாக செயல்பட வேண்டும்.
சுவாரஸ்யமாக, சுகாதார நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாறுமாறு பரிந்துரைக்கின்றனர், ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் வளர்சிதை மாற்ற விகிதத்தை விரைவுபடுத்த உதவும் சில வழக்கத்திற்கு மாறான கலவைகள் உள்ளன. மேலும், இவை அறிவியலால் ஆதரிக்கப்படுகின்றன. இக்கட்டுரையில், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பானங்களை உட்கொள்ளும் போது எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

கிரேப் ஃபுரூட் சாறு
கிரேப் ஃபுரூட் சாறு அல்லது கிரேப் ஃபுரூட் பானம் சாப்பிடுவதற்கு முன் பெர்ரிகளுடன் பருகுவது உடல் எடையை குறைக்கப் பின்பற்றப்படும் பழைய ரகசியம். ஏனெனில் இந்த சிட்ரஸ் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பிடிவாதமான கொழுப்பை எரிக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை நிர்வகிக்கிறது. யு.சி நடத்திய ஆய்வின் படி எலிகள் மீது மேற்கொண்டதில், அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொண்டபோதிலும், கிரேப் ஃபுரூட் சாற்றின் ஒரு சிறிய பகுதி உண்ணாவிரத இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவியது. இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

தண்ணீர்
உயிர்வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர். இது இயற்கையாக கிடைக்கும் சிறந்த எடை இழப்பு பானமாகும். ஏனென்றால், நமது உடலின் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனது மற்றும் உடலின் சரியான செயல்பாட்டிற்கு இது அவசியம். டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உடலில் உள்ள பெரும்பாலான நொதி மற்றும் வேதியியல் எதிர்வினைகளுக்கு நீர் ஒரு ஊடகமாக செயல்படுகிறது, குறிப்பாக இந்த ஆற்றல் உற்பத்தியில் ஈடுபடும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும். நீர் சரியான செரிமானம், உறிஞ்சுதல் மற்றும் அமைப்புக்குள் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல உதவுகிறது. மேலும் இது நச்சுகளை வெளியேற்றவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. கடைசியாக, இது பசியைக் கட்டுப்படுத்தவும் மற்றும் குறைக்கவும் உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள்களில் பீட்டா கரோட்டின், நீர், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினசரி ஒரு முழு ஆப்பிள் அல்லது ஆப்பிள் பழச்சாறு எடுத்துகொள்வதன் மூலம் எடை இழப்பு முடிவுகள் உறுதிபடுத்தப்பட்டது. மேலும் இந்த எளிய புளித்த பானம் உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது பசியை அடக்கும் பொருளாக செயல்படுகிறது. உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது தொப்பையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கவும் உதவும்.

ஆய்வுகள்
39 பங்கேற்பாளர்களிடம் 12 வார காலத்திற்கு நடத்தப்பட்ட ஆய்வின்படி, சில ஆப்பிள் சைடர் வினிகருடன் கட்டுப்படுத்தப்பட்ட கலோரி உணவைப் பின்பற்றி எடை இழப்பு ஏற்பட்டது. நீங்கள் அதிகளவு வினிகரை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனேவ, ஆப்பிள் சைடர் வினிகரை மிதமான அளவில் உட்கொள்வது மட்டுமே எடையைக் குறைக்க உதவுகிறது.

அதிக எடை இழப்பு
ஆப்பிள்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவுகின்றன. இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. மற்றொரு ஆய்வில், ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழம் எடுத்துகொள்வது ஓட்ஸ் குக்கீஸ் எடுத்துகொள்ளும் பெண்களை விட அதிக எடை இழப்பை சந்தித்தது கண்டறியப்பட்டது.

மசாலா கலந்த பானங்கள்
மசாலா மற்றும் மூலிகைகளின் கலவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், பிடிவாதமான கொழுப்பை எரிக்கவும் உதவும். விரைவான மசாலா பானம் தயாரிக்க, 1 அங்குல இலவங்கப்பட்டை எடுத்து, துளசி இலைகள் மற்றும் 1 அங்குல இஞ்சியுடன் காய்ச்சவும். இந்த கலவை தயாரானதும், வடிகட்டி, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை ஜாதிக்காய் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். இந்த மசாலா மற்றும் மூலிகை பானம் ஒரு நாளைக்கு இரண்டு முறை கொழுப்பை எரிக்க உதவுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது.

மாதுளைப்பழம்
மாதுளை உடல் பருமன் எதிர்ப்பு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மாதுளையில் இருக்கும் அந்தோசயின்கள், டானின்கள், பாலிபினால்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் கொழுப்பை குறைப்பதற்கான சரியான தீர்வாக அமையும். க்ரீன் தேயிலை விட மாதுளை சாற்றின் ஆக்ஸிஜனேற்ற திறன் அதிகம் என்று ஆய்வு கூறுகிறது. மற்றொரு ஆய்வு மாதுளை சாறு இரத்த அழுத்த அளவை குறைப்பதாக சொல்கிறது. தினமும் அரை கப் மாதுளை எடுத்துகொள்வது நல்லது. மாதுளை கொண்டு சாலட்கள் சேர்க்கலாம். இதை பழச்சாறாக்கியும் பருகலாம்.