Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
Bread Vada Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே பெரும்பாலான மக்களுக்கு ஏதாவது சூடாக நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தினமும் கடையில் வாங்குவது என்பது அதிக செலவை ஏற்படுத்தும், ஆரோக்கியமற்றதும் கூட. எனவே வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான நொறுக்குத்தீனி செய்வதே புத்திசாலித்தனம்.
அனைவருக்கும் பிடித்த நொறுக்குத்தீனி என்றால் அதில் முதலிடத்தில் இருப்பது வடைதான். ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. உளுந்த வடை சுடுவதற்கு உளுந்தை குறிப்பிட்ட நேரம் ஊற வைக்க வேண்டும். நேரம் இல்லாதபோது வடையை எப்படி செய்ய முடியும்? அதற்கான தீர்வைதான் இந்த பதிவில் நாம் பார்க்க பார்க்கப்போகிறோம். உங்கள் வீட்டில் 4 பிரட், 1 கப் அரிசி மாவு இருந்தால் போதும் டக்குனு மொறுமொறுப்பான சுவையான வடையை செய்து விடலாம்.

உங்களுக்கு சுவையான பிரெட் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மொறுமொறுப்பான பிரெட் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 பிரெட் துண்டு
- ¼ கப் அரிசி மாவு
- 3 ஸ்பூன் ரவை
- 1 கப் தயிர்
- ½ கப் கேரட், துருவியது
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், நறுக்கியது
- ¼ ஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- ¼ ஸ்பூன் உடைத்த மிளகு
- ½ ஸ்பூன் சீரகம்
- தேவையான அளவு உப்பு
- வறுக்க எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
- முதலில், ஒரு அகன்ற பாத்திரத்தில் 4 பிரெட் துண்டுகளை போட்டு கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- அதன்பின் ¼ கப் அரிசி மாவு, 3 ஸ்பூன் ரவை சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் 1 கப் தயிர், ½ கப் துருவிய கேரட், நறுக்கிய பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், ¼ தேஸ்பூன் துருவிய இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை, 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்
- அதன்பின் ¼ ஸ்பூன் மிளகு, ½ ஸ்பூன் சீரகம் மற்றும் ½ ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி மென்மையான மாவைத் தயாரிக்கவும்.
- பின்னர் கைகளில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய பந்து அளவிலான மாவை எடுத்து கையில் தட்டையாக தட்டிக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். சூடான எண்ணெயில் தட்டி வைத்த வடையை போட்டு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுக்கவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு எண்ணெய் வடிந்ததும் சூடான வடையை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications