Just In
- 57 min ago
இந்த ராசிக்காரர்கள் செக்ஸ் ஆல்கஹால் புகைபிடிப்பது போன்ற பழக்கத்திற்கு அடிமையா இருப்பார்களாம்.. !
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- 15 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 16 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
Don't Miss
- News
"பேச்சுவார்த்தை" முடியலயோ.. வெளியே வந்ததும்.. சசிகலா கையில் வந்து விழுந்த "நோட்டீஸ்".. செம டென்ஷன்!
- Movies
ஆன்லைன் விளையாட்டின் தூதர்.. நடிகை தமன்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் திடீர் நோட்டீஸ்!
- Sports
அடுத்த தமிழக வீரரும் காலி?.. எவ்வளவு எதிர்பார்த்தோம்.. இப்படி பண்ணலாமா.. தினேஷ் கார்த்திக் ஷாக்!
- Automobiles
சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுனால தான் உங்க தொப்பை அதிகமாகுது அதை குறைக்க முடியாதுனு சொல்லுற இந்த விஷயம் எல்லாம் கட்டுகதையாம்!
கொரோனா ஊரடங்கு காலகட்ட நாட்களில், கிட்டத்தட்ட அனைவரும் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளை அடைய முயற்சிக்கின்றோம். மேலும், நீங்கள் இணையத்திலிருந்தும் ஏராளமான ஆலோசனைகளை பெறலாம். இருப்பினும், உங்கள் உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்கு வரும்போது, நல்ல நண்பர்களிடமிருந்து வரும் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்பது, சில நேரங்களில் பேரழிவுக்கான ஒரு நிச்சயமான செய்முறையாக இருக்கலாம்.
ஆதாவது உங்கள் வயிற்று கொழுப்பை பற்றியும் அதை குறைப்பது பற்றியும் சமூகத்தில் பல கட்டுக்கதைகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவை, உண்மையானவை அல்ல. மிகவும் பிரபலமான சில உடற்பயிற்சி கட்டுக்கதைகள் மற்றும் நம் உடல்களை எவ்வாறு சிறப்பாக புரிந்துகொள்வது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டுக்கதை 1: இலக்கு எடை இழப்பு சாத்தியமில்லை
சில குறிப்பிட்ட உடல் பாகங்களின் எடையை குறைக்க எந்த உடற்பயிற்சியும் உங்களுக்கு உதவ முடியாது. உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மெதுவாகதான் எடை இழப்பீர்கள். தொடைகள், கைகள், தொப்பை. இலக்கு எடை இழப்பு சாத்தியமில்லை. க்ரஞ்ச்ஸ், வி-அப்கள் போன்ற பயிற்சிகள் வயிற்றைச் சுற்றியுள்ள தசையைச் செயல்படுத்துகின்றன. ஆனால், நீங்கள் கிலோவை வேகமாக இழக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல.
தினமும் காலையில இந்த புரதம் நிறைந்த உணவுகள மட்டும் நீங்க சாப்பிடீங்கனா...என்ன நடக்கும் தெரியுமா?

கட்டுக்கதை 2: தொப்பை கொழுப்பு என்பது உடல்
கொழுப்பின் மற்ற கொழுப்பைப் போன்றது
உடலில் இருக்கும் அனைத்து வகையான கொழுப்புகளும் ஒரே மாதிரியானவை என்று நினைப்பது பொதுவானது. ஆனால் அவை அவ்வாறு இல்லை. வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பு உடலின் மற்ற பகுதிகளில் இருப்பதை விட மிகவும் ஆபத்தானது. உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படும் தொப்பை கொழுப்பு, சருமத்தின் கீழ், உறுப்புகளைச் சுற்றி ஆழமாகக் குவிந்து, இன்சுலின் எதிர்ப்பு, வகை 2 நீரிழிவு நோய், இருதய பிரச்சினைகள் போன்ற சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

கட்டுக்கதை 3: சில உணவுகள் தொப்பை கொழுப்பை குறைக்க வைக்கும்
கேப்சிகம், மிளகு போன்ற உணவுகளை சாப்பிடுவது தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க உதவும் என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், இவை வெறும் கூற்றுக்கள் மற்றும் எந்த முடிவையும் காட்டாது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் ஒரு மெல்லிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. இது எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும். ஆனால் தொப்பை பகுதியில் இருந்து குறிப்பாக எடை குறைக்க உங்களுக்கு உதவாது.
தொப்பை மற்றும் தொடை கொழுப்பு இதுல எது உங்களுக்கு இதய நோய் பிரச்சனையை ஏற்படுத்தும் தெரியுமா?

கட்டுக்கதை 4: இடுப்பு பயிற்சி ஆடை அணிவது பயனுள்ளதாக இருக்கும்
தொலைக்காட்சியில் டன் கணக்கான இடுப்பு பயிற்சி ஆடை மற்றும் கருவி விளம்பரங்களை நீங்கள் காணலாம், விரைவான முடிவுகளை தருவதாக கூறுவார்கள். ஆனால், இந்த ஆடம்பரமான உபகரணங்கள் உண்மையில் வேலை செய்யாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்போம். தொப்பை கொழுப்பை இழக்க குறுக்குவழி எதுவும் இல்லை. உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சி மற்றும் உணவு அவசியம்.

கட்டுக்கதை 5: கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்ப்பது
தொப்பை கொழுப்பை இழக்க உதவும்
கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது என்பது முதலில் தொப்பைக்கு வழிவகுக்கும் என்பதல்ல. இது உங்கள் ஆரோக்கியமற்ற உணவு, செயலற்ற தன்மை, தூக்க முறை மற்றும் பிற வாழ்க்கை முறைகளின் விளைவாகும். ஒவ்வொரு பகுதியிலும் மாற்றங்களைச் செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் இடுப்பு தொப்பையை குறைக்க முடியும்.