For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடல் எடையை வேகமாக குறைக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடனும் தெரியுமா?

|

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் ஒரு பிரச்சனை உடல் பருமன். உடல் பருமன் அதிகமாக இருந்தால் பிற்காலத்தில் எளிதில் நோய்கள் தொற்ற அதிக வாய்ப்புள்ளது. இரத்தம் அழுத்தம், சர்க்கரை நோய், இதய பிரச்சனைகள் போன்றவை உடல் பருமனால் ஏற்படுகிறது. ஆதலால், உடல் எடையை சரியான அளவு பராமரிப்பது மிகமிக அவசியம். எடை இழப்பு என்று வரும்போது, மக்களிடையே நிறைய குழப்பங்கள் உள்ளன. அவர்கள் எப்போதும் உணவு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான கேள்விகளுடன் போராடுவதைக் காணலாம்.

எடை இழப்பு தொடர்பாக இணையத்தில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. இது எது சரி எது தவறு என்பதை வேறுபடுத்துவது மக்களுக்கு கடினமாக உள்ளது. நீங்கள் எடையைக் குறைக்க அல்லது தசைகளை உருவாக்க முயற்சிக்கும் ஒருவராக இருந்தால், உங்கள் உணவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த கட்டுரையில் உங்கள் எடை இழப்பு பயணத்தில் ஒருநாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை இழப்பு

எடை இழப்பு

எடை பார்ப்பவர்களிடையே இதுபோன்ற ஒரு கேள்வி, ஒருநாளைக்கு எத்தனை முறை சாப்பிடுகிறார் என்பதை பற்றியது. ஒரு நாளில் 5-6 சிறிய உணவை உட்கொள்வது ஒரு நாளில் மூன்று பெரிய உணவை உட்கொள்வதை விட சிறந்தது என்று சிலர் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக விரைவாக எடை குறைகிறது. ஆனால் அது உண்மையில் உதவியாக இருக்கிறதா? இந்த கட்டுரையில், இந்த பொதுவான வினவலுக்கான பதிலைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.

சமீபத்திய ஆய்வின் படி இந்த உணவுகள் உங்க ஆயுளை பல ஆண்டுகள் அதிகரிக்குமாம்...!

ஆய்வு கூறுவது

ஆய்வு கூறுவது

ஒட்டாவா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, மூன்று முறை உணவு உண்பதற்கு பதிலாக ஆறு முறை உணவு உண்பதில் கலோரிகளைப் பிரிப்பதால் எந்த நன்மையும் தீமையும் இல்லை.

ஆறு முறை சாப்பாடு சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கு

ஆறு முறை சாப்பாடு சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கு

ஆறு உணவுக்கு பதிலாக மூன்று வேளை சாப்பிடுவது கலோரி எரியும் அல்லது கொழுப்பு இழப்பு செயல்முறையை பாதிக்காது என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. மாறாக, ஆறு முறை உணவை உட்கொள்வது உண்மையில் மக்களை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட வைக்கும் என்று ஆராய்ச்சியாளர் கண்டார். அடிக்கடி உணவு உட்கொள்வது எடை இழப்புக்கு நல்லது என்ற கூற்றை ஆதரிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

மூன்று முறை சாப்பாடு சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கு

மூன்று முறை சாப்பாடு சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கு

ஒரு நாளைக்கு ஆறு வேளை மட்டுமே சாப்பிடுவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அல்ல. மூன்று உணவை மட்டுமே சாப்பிடுவது உங்களை பசியடையச் செய்யும் என்றும் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பால் மற்றும் வாழைப்பழம் இவற்றை சேர்த்து உட்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எடை இழக்க சரியான வழி

எடை இழக்க சரியான வழி

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. ஆனால் அனைத்தும் உங்கள் வாழ்க்கை முறைக்கு பொருந்தாது. நீங்கள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டிய இடத்தில் ஏதாவது செய்யத் தேர்வுசெய்தால், தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

உங்களிடம் 9 முதல் 5 வேலை இருந்தால், ஒவ்வொரு இரண்டு மூன்று மணி நேரத்திற்கும் பிறகு உணவு உட்கொள்வது கடினம். எடை இழப்புக்கு, உங்கள் கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். நீங்கள் ஒரு நாளில் ஆறு அல்லது மூன்று வேளை சாப்பிட்டால் பரவாயில்லை, உங்கள் கலோரிகளை சம பாகங்களாக பிரித்து, எடை குறைவதற்கு அதை ஒட்டிக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How many times should you eat in a day to lose weight?

Read on to know how many times should you eat in a day to lose weight.