For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேத முறைப்படி உங்க உடல் எடையை இந்த வழிகள் மூலம் ரொம்ப ஈஸியா குறைக்கலாம் தெரியுமா?

ஆயுர்வேதத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவது சிறந்தது. நவீன ஆராய்ச்சி கூட தூக்கமின்மை பிரச்சனை மக்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று காட்டுகிறது.

|

கொரோனா தொற்றுநோய் நம் அனைவரையும் உடல் எடை அதிகரிக்கச் செய்துள்ளது. உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு நாம் அதிகமாக பழகிவிட்டோம். இதனால், உடல் செயல்பாடுகள் குறைந்து, நம் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண காரியமில்லை. அதற்கு நாம் அதிகப்படியான விஷயங்களை செய்ய வேண்டும். இது மிகவும் சவாலான பணி. உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்த நேரத்திலும் நீங்கள் கிலோ எடையைக் குறைப்பதாகக் கூறும் பல்வேறு ஆடம்பரமான உணவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை நீண்ட காலத்திற்கு நிலையானவை அல்ல.

Ayurvedic tips to follow for weight loss in tamil

உடல் பருமனை நீங்கள் ஆரோக்கியமான வழியில் குறைக்க வேண்டும். ஆனால் சில எளிய பழைய ஆயுர்வேத முறைகள் உங்கள் உடல் எடையை குறைத்து அதை பராமரிக்க உதவும். உண்மையில் உதவக்கூடிய எட்டு எளிய ஆயுர்வேத குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெதுவெதுப்பான நீரைப் பருகவும்

வெதுவெதுப்பான நீரைப் பருகவும்

ஆயுர்வேத முறைப்படி, குளிர்ச்சியைக் காட்டிலும் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க அறிவுறுத்துகிறது. ஆயுர்வேதத்தில் வெதுவெதுப்பான நீர் ஒரு அமுதமாகக் கருதப்படுகிறது மற்றும் உடல் நச்சுகளை அகற்ற உதவுகிறது. மாசு என்பது மாசுபடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகள் காரணமாக உடலில் தேங்கும் ஒரு ஒட்டும் உணவு பொருள்.

MOST READ: உங்களுக்கு ஏற்படும் 'இந்த' அபாயத்தை குறைக்க உதவும் வைட்டமின் உணவுகள் என்னென்ன தெரியுமா?

போதுமான அளவு உறக்கம்

போதுமான அளவு உறக்கம்

ஆயுர்வேதத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவது சிறந்தது. நவீன ஆராய்ச்சி கூட தூக்கமின்மை பிரச்சனை மக்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று காட்டுகிறது. ஆதலால், நல்ல தூக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

இரவு உணவை குறைவாக சாப்பிடுங்கள்

இரவு உணவை குறைவாக சாப்பிடுங்கள்

இரவு உணவை குறைவாக உட்கொள்வது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்காது மற்றும் நீங்கள் தூங்கும்போது உடலின் இயற்கையான நச்சுத்தன்மையை அதிகரிக்காது. ஆயுர்வேதத்தின்படி இரவு 7 மணிக்கு முன் இரவு உணவை சாப்பிட வேண்டும். இதுவே இரவு உணவு சாப்பிட சிறந்த நேரம்.ஏனெனில், இது உங்கள் உடலுக்கு உணவை ஜீரணிக்க போதுமான நேரத்தை அளிக்கிறது.

ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுங்கள்

ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுங்கள்

வழக்கமான செரிமான செயல்முறையிலிருந்து உங்கள் உடலுக்கு சிறிது ஓய்வு தேவை. எனவே, ஆரோக்கியமான மற்றும் சிறிய உணவை சாப்பிடுவதன் மூலம் அதற்கு ஓய்வு கொடுப்பது முக்கியம். இடையில் சிற்றுண்டி இல்லாமல் ஒரு நாளைக்கு மூன்று வேளை மட்டும் சாப்பிடுவது செரிமானத்திற்கு நேரம் கொடுக்கிறது.

MOST READ: உங்களுக்கு இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருந்தால் உங்க மூட்டுகள் ரொம்ப பலவீனமா இருக்குமாம்!

உணவுக்குப் பிறகு நடந்து செல்லுங்கள்

உணவுக்குப் பிறகு நடந்து செல்லுங்கள்

ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம். நீங்கள் ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டால், தினமும் குறைந்தது 10-20 நிமிடங்கள் உணவுக்குப் பிறகு நடக்கத் தேர்வு செய்யவும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உங்களை லேசாக உணர வைக்கிறது.

பருவகால உணவுகளை உண்ணுங்கள்

பருவகால உணவுகளை உண்ணுங்கள்

பருவத்திற்கு ஏற்ப இயற்கை நமக்கு உணவுகளை அளிக்கிறது. கோடையில், இயற்கை நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை அளிக்கிறது. குளிர்காலத்தில் அது நமக்கு நட்ஸ்கள், விதைகள் மற்றும் வேர் காய்கறிகளை அளிக்கிறது.

MOST READ: உயிVருக்கு ஆபத்தான மாரடைப்பு மற்றும் இதய நோயை வரமால் தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

அறுசுவைகளையும் கொண்டிருங்கள்

அறுசுவைகளையும் கொண்டிருங்கள்

ஆயுர்வேதம் உணவை சுவைக்கு ஏற்ப ஆறு வகைகளாகப் பிரிக்கிறது. அவை, இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு மற்றும் உப்பு. உடலை சமநிலைப்படுத்த உங்களுக்கு அனைத்து சுவைகளும் இருப்பது முக்கியம். அதிக சர்க்கரை மற்றும் உப்பு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

உணவில் மூலிகைகள் சேர்க்கவும்

உணவில் மூலிகைகள் சேர்க்கவும்

வீடுகளில் பயன்படுத்தப்படும் சில பொதுவான மசாலா மற்றும் மூலிகைகள் மஞ்சள், இஞ்சி, அஸ்வகந்தா, குக்குல், திரிபலா மற்றும் இலவங்கப்பட்டை. தினமும் உங்கள் உணவில் இவற்றைப் பயன்படுத்துவது எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic tips to follow for weight loss in tamil

Here we are talking about the Ayurvedic tips to follow for weight loss in tamil.
Story first published: Saturday, October 16, 2021, 12:47 [IST]
Desktop Bottom Promotion