Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
இந்திய வரலாறு ஆயிரக்கணக்கான அரசர்கள் வாழ்ந்து சென்றுள்ளனர், அதில் சில அரசர்கள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர், சிலர் வரலாற்றையே உருவாக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சத்ரபதி சாம்பாஜி. அவரின் வாழ்க்கை மட்டுமல்ல அவரின் மரணம் கூட வரலாறாக மாறியது. கடந்த ஆண்டு வெளிவந்த சாவா திரைப்படம் சத்ரபதியின் வீரம், வலிமை, மீள்தன்மை மற்றும் போர் திறனை இந்த தலைமுறையினருக்கு எடுத்துரைத்தது.
அவர் சுயராஜ்யத்திற்காக வாழ்ந்து,போராடி, இறந்த ஒரு மாவீரன், அவர் இடைவிடாத சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்ட குணத்தையும், எதிர்ப்புணர்வையும் தீவிரமாக வெளிப்படுத்தினார். 1689-ல் இதே மார்ச் 11-ல் சத்ரபதி சாம்பாஜி முகலாயர்களுக்கு அடிபணிவதற்குப் பதில் மரணமடைவதே மேல் என்று தைரியத்துடன் மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

சாம்பாஜியின் மரணம்
மனிதர்கள் அனைவருமே மரணத்தைக் கண்டு பயப்படத்தான் செய்வார்கள், ஆனால் சாம்பாஜி மண்டியிடுவதை விட மரணமே சிறந்தது என்று மரணத்தை தானாக ஏற்றுக்கொண்டார். சாம்பாஜி மகாராஜின் மரணம் ஒரு முடிவல்ல, அது அவரது அழியாத விருப்பத்தை வலியுறுத்துவதாகும். அவரது முன்னிலையில், வலிமைமிக்க எதிரிகள் கூட அவர்களின் சொந்த படையுடன் இருக்கும்போது கூட எப்படி நடுங்கினார்கள். அவர் வெறும் போர்களில் மட்டும் ஈடுபடவில்லை, தன்னைப் பற்றிய பயம் தனது எதிரிகளை அவர்களின் சொந்த கோட்டைகளிலேயே அமைதியற்றவர்களாக வைத்திருப்பதை உறுதி செய்தார்.
சுயராஜ்ஜியத்திற்கான போர்
சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் ஒரு வாரிசு மன்னர் மட்டுமல்ல. அவர் சுயராஜ்ஜியத்தை அடைவதற்காக தனது இறுதி மூச்சு வரை போராடினார். ஒரு சுதந்திர மராட்டிய ஆட்சிக்கான அவரது ஆசை ஒரு தற்காலிக லட்சியம் அல்ல, அது அவருக்குள் எரிந்த ஒரு நெருப்பாக இருந்தது, அதுவே அவரை அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. சாவா திரைப்படம் அவரது ஆற்றலையும், வீரத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியது.
இன்று, நாம் பெருமையுடனும், அன்புடனும், வலிமைமிக்க மராட்டியப் பேரரசின் உறுதியான, வலிமைமிக்க, அசைக்க முடியாத இரண்டாவது ஆட்சியாளரான சத்ரபதி சம்பாஜி மகாராஜை நினைவு கூறுகிறோம். இன்று சத்ரபதி சாம்பாஜியின் 336-வது நினைவுநாள். ஔரங்கசீப்பால் சிறைபிடிக்கப்பட்டு இரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்ட அவர், தனது தர்மத்தையோ அல்லது சுயராஜ்யத்திற்கான தனது உறுதிப்பாட்டையோ ஒருபோதும் கைவிடவில்லை. அவரது அசாதாரண துணிச்சல், இணையற்ற வீரம் மற்றும் தனது மக்கள் மற்றும் ராஜ்யத்திற்கான உயர்ந்த தியாகங்கள் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன.
சத்ரபதி சாம்பாஜி அனுபவித்த சித்திரவதைகள்
சத்ரபதி சாம்பாஜி மகாராஜா ஔரங்கசீப்பால் 40 நாட்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் சத்ரபதி சாம்பாஜி மகாராஜா தனது மதத்தைத் துறப்பதற்குப் பதிலாக மரணத்தைத் தேர்ந்தெடுத்தார். சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் கொடூரமான கொலைக்குப் பிறகு, மராட்டியர்கள் கோபமடைந்து ஒன்றுபடத் தொடங்கினர். பெண்களும் ஆயுதங்களுடன் போர்க்களத்தில் இறங்கினர். அவர்களின் ஒரே நோக்கம் ஒளரங்கசீப்பை வீழ்த்துவதாக இருந்தது.
சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் வெறும் ஒரு போர்வீரன் மட்டுமல்ல, அவர் தளராத துணிச்சல் மற்றும் தர்மத்தின் மீதான அர்பணிப்புக்கான சின்னமாகவும் இருந்தார். முகலாயர்களுக்கு எதிரான அவரது எதிர்ப்பு, பல தசாப்தங்களாக ஔரங்கசீப்பின் கொடுங்கோன்மையிலிருந்து இந்தியா விடுபட்டிருப்பதை உறுதி செய்தது. அவரது தியாகம், தர்மம் மற்றும் நீதிக்காக போராட பல தலைமுறைகளை ஊக்குவிக்கிறது.



Click it and Unblock the Notifications











