For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்கும் அற்புதமான கறிவேப்பிலை டீ!! - தயாரிக்கும் முறை!!

கறிவேப்பிலையின் பயன்களும் கறிவேப்பிலை டீ மூலம் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பது பற்றிய ஒரு தொகுப்பு

|

கறி வேப்பிலை என்பது கதி பட்டா என்று அழைக்கப்படுகிறது. இந்த கறி வேப்பிலை மரம் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா பகுதிகளில் காணப்படுகிறது.

இந்த கறிவேப்பிலை நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த கறி வேப்பிலையை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் பண்டைய காலத்தில் நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்பட்டுள்ளது. காலையில் நோய்வாய்ப்படுதலிருந்து டயாபெட்டீஸ் வரை இதன் பயன்கள் நீள்கிறது.

எனவே தான் இந்த அற்புதமான கறிவேப்பிலை டீ யைஎப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்பது பற்றியும் அதைக் கொண்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பது பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுதல்

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுதல்

உடல் எடை அதிகரிக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதிகமான உணவு எடுத்தல், ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுதல், காலை உணவை தவிர்த்தல், சீரண மண்டல பிரச்சினைகள் மற்றும் உடலில் நிறைய தேவையில்லாத நச்சுக்களின் தேக்கம் இவற்றால் உடல் எடை அதிகரிக்கிறது.

இந்த கறிவேப்பிலை டீ உங்கள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளையும் நச்சுக்களையும் வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிகமான கொழுப்பு உடலில் தங்குவது தடுக்கப்படுகிறது.

 சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

கறிவேப்பிலை டீ, ஒரு அற்புதமான மூலிகை ஆகும். இதிலுள்ள சத்துக்கள் நமது சீரண சக்தியை அதிகரித்து பேதி ஏற்படுவதை தடுக்கிறது.

இரத்த சர்க்கரையை குறைக்கிறது

இரத்த சர்க்கரையை குறைக்கிறது

நீங்கள் சர்க்கரை அதிகமான உணவையோ பானங்களையோ எடுத்து கொண்டால் இரத்த சர்க்கரை அதிகமாகி விடும். எனவே இந்த அதிகமான சர்க்கரை கரையாமல் அப்படியே கொழுப்பாக படிந்து விடும். இதுவும் உடல் எடை அதிகரிக்க காரணமாகி விடும்.

கறி வேப்பிலை நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து அவை கொழுப்பாக மாறுவதையும் தடுக்கிறது. மேலும் டயாபெட்டீஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்

சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்

கறி வேப்பிலையில் உள்ள கெமிக்கல் பொருளான கார்போஷோல் அல்கலைடு ஒரு பாதுகாப்பு வீரர்கள் போல் செயல்பட்டு நமது உடலை பாக்டீரியா மற்றும் நோய் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கிறது.

கறி வேப்பிலையில் உள்ள மற்றொரு பொருள் லினோல் மாதிரி ஒரு மருத்துவ குணம் வாய்ந்ததாக செயல்படுகிறது.

வெட்டுக் காயங்கள் மற்றும் தீக்காயங்களை சரி செய்தல்

நீங்கள் டீ தயாரித்த பிறகு எஞ்சியுள்ள இலையை நசுக்கி வெட்டுப்பட்ட காயங்கள் மற்றும் தீக்காயங்களில் போட்டால் போதும் குணமாகி விடும்.

இதற்கு காரணம் கறிவேப்பிலையில் உள்ள மகானிமபைசின் என்ற பொருள் காயங்களை ஆற்றுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மயிர்கால்களில் உள்ள புண்களை யும் சரி செய்கிறது.

உடல் எடையை கட்டுக்குள் வைத்தல்

உடல் எடையை கட்டுக்குள் வைத்தல்

ஒரு கப் கறிவேப்பிலை டீ குடிப்பதால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கொழுப்புகள் இதிலுள்ள மருத்துவ பொருட்களான மகானிமபைசின் மற்றும் கார்போஷோல் போன்ற பொருட்களால் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

 மலச்சிக்கலை தடுத்து டயரியாவை தடுக்கிறது

மலச்சிக்கலை தடுத்து டயரியாவை தடுக்கிறது

கறிவேப்பிலை சீரண சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நமது சீரண மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுகிறது. சீரண குடல்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது எல்லா கறிவேப்பிலையும் செய்யாது.

இந்த வேலைகளை செய்யும் கறிவேப்பிலையில் சிறுதளவு லாக்ஷ்யேட்டிவ் பொருட்கள் இருக்கும். இந்த கறிவேப்பிலையை போட்டு தேநீர் தயாரிக்கும் போது இவை குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து டயரியா ஏற்படுவதை தடுத்து மலச்சிக்கலையும் களைகிற

மன அழுத்தத்தை குறைக்கிறது

மன அழுத்தத்தை குறைக்கிறது

கறிவேப்பிலை உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு அருமருந்தாகும். எனவே இந்த கறிவேப்பிலை டீ குடித்த பிறகு மிகவும் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள்.

நினைவாற்றல் அதிகரித்தல்

நினைவாற்றல் அதிகரித்தல்

கறிவேப்பிலையை தொடர்ந்து உணவிலோ அல்லது தேநீராக சேர்த்து கொண்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆராய்ச்சி படி இது அம்னீசியா மற்றும் அல்சீமர் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

காலை உடல் நல பாதிப்பு மற்றும் குமட்டலை தடுத்தல்

காலை உடல் நல பாதிப்பு மற்றும் குமட்டலை தடுத்தல்

நீங்கள் பயணம் மேற்கொள்ளும் போது வாந்தி குமட்டல் போன்ற பாதிப்புகள் இருந்தால் கறிவேப்பிலை டீ போதும். ஆமாங்க இது உங்கள் பயண பாதிப்புகளை சரி செய்து விடும். அதே மாதிரி கருவுற்ற தாய்மார்களின் காலை உடல் நல பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

கண் பார்வையை அதிகரித்தல்

கண் பார்வையை அதிகரித்தல்

கறிவேப்பிலையில் அதிகமான விட்டமின் ஏ சத்து உள்ளது. இது உங்கள் கண்பார்வையை அதிகரிக்கிறது. எனவே தினமும் ஒரு கப் கறிவேப்பிலை டீ குடித்தால் போதும் இனி கண்ணாடி போட வேண்டிய வேலையே கிடையாது. மேலும் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் அழுத்தத்தை குறைக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது

புற்றுநோயை தடுக்கிறது

ஜப்பானில் உள்ள மிஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சி படி பார்த்தால் கறிவேப்பிலையில் உள்ள கார்போஷோல் அல்கலைடு பொருள் புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. பொதுவாக குடல் புற்று நோய், இரத்த புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுகிறது.

சரி இத்தனை அற்புதங்கள் நிறைந்த கறிவேப்பிலை டீ யை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்

கறி வேப்பிலை டீ தயாரிப்பது எப்படி

கறி வேப்பிலை டீ தயாரிப்பது எப்படி

தேவையான பொருட்கள்

1 கப் தண்ணீர்

30-45 கறிவேப்பிலைகள்

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இறக்கி வையுங்கள்.

அதில் 30-45 கறிவேப்பிலைகளை போட்டு இரண்டு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். தண்ணீரின் கலர் மாறும் வரை வைத்திருக்க வேண்டும்.

பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி மீண்டும் ஒரு முறை சூடுபடுத்தி கொள்ளவும்

பிறகு கொஞ்சம் தேன் மற்றும் லெமன் ஜூஸ் டேஸ்ட்டுக்காக சேர்த்து கலந்து பருகவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Health Benefits Of Curry Leaves Tea For Weight Loss + How To Make It

12 Health Benefits Of Curry Leaves Tea For Weight Loss + How To Make It
Desktop Bottom Promotion