அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அழகைப் பராமரிப்பதில் பெண்களைப் போல் யாராலும் முடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர்கள் தங்கள் அழகைப் பராமரிக்கும் போது மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலில் சருமத்தில் அதிகப்படியான அழுக்குகள் தங்கி, சரும அழகைக் கெடுக்கின்றன. எனவே அழகைப் பராமரிப்பதில் சோம்பேறித்தனமாக இருந்தால், பின் முதுமைத் தோற்றத்தை விரைவில் பெற வேண்டி வரும்.

ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய ஷேவிங் பற்றிய விஷயங்கள்!!!

அதுமட்டுமின்றி, எந்த ஒரு சரும பிரச்சனைக்கும் முறையான பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலையை மோசமாக்கிவிடும். இதில் ஆண்கள் தான் அதிக தவறுகளை இழைப்பார்கள். ஆண்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் சில அவர்களின் அழகையே கெடுத்துவிடுகின்றன.

ஷேவிங் மூலம் 'மிஸ்டர் பெர்பெக்ட்' என்ற பெயர் வாங்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

சரி, இப்போது அழகுப் பராமரிப்பில் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சன் ஸ்க்ரீனைத் தவிர்ப்பது

சன் ஸ்க்ரீனைத் தவிர்ப்பது

நம்புவீர்களோ மாட்டீர்களோ, ஆனால் ஆராய்ச்சில் ஒன்றில் பல ஆண்கள் பெண்களை விட சரும புற்றுநோயால் பாதிப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தையும் பெறுகின்றனர். இதற்கு காரணம் சன் ஸ்க்ரீனை ஆண்கள் தடவாமல் இருப்பது தான். எனவே இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் SPF 15 கொண்ட சன் ஸ்க்ரீனை, தினமும் வெளியே செல்லும் முன் தவறாமல் தடவி செல்லுங்கள். அதுவும் தினமும் 2 முறை தடவுங்கள்.

உயர்தர சரும பராமரிப்பு பொருட்களை மட்டும் பயன்படுத்துவது

உயர்தர சரும பராமரிப்பு பொருட்களை மட்டும் பயன்படுத்துவது

உயர்தர சரும பராமரிப்பு பொருட்களில் மட்டும் கெமிக்கல்கள் எதுவும் இல்லையா என்ன? எனவே எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதனைப் பயன்படுத்தும் முன், பரிசோதித்துப் பார்த்து, பின்பே பயன்படுத்த வேண்டும்.

சரும வகைக்கு ஏற்ற பராமரிப்பு கொடுக்காதது

சரும வகைக்கு ஏற்ற பராமரிப்பு கொடுக்காதது

பொதுவாக ஆண்கள் தங்களின் சரும வகைக்கு ஏற்ற பராமரிப்புக்களை மேற்கொள்ளமாட்டார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு அதைப் பற்றிய அறிவு இல்லாதது என்று சொல்லலாம். எனவே உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

எண்ணெய் பசை சருமத்தினர் எண்ணெயை தவிர்ப்பது

எண்ணெய் பசை சருமத்தினர் எண்ணெயை தவிர்ப்பது

சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுப்பது தான் சீபம் என்னும் ஏஜென்ட். இது தான் சருமத்தில் எண்ணெய் பசையை சுரக்கிறது. இருப்பினும் இது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, முகத்தில் எண்ணெய் வழிய ஆரம்பிக்கும். இதன் காரணமாகவே பலரும், மாய்ஸ்சுரைசர்கள் தடவுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் என்ன தான் எண்ணெய் பசை சருமத்தினராக இருந்தாலும், எண்ணெய் பசை குறைவாக உள்ள சரியான மாய்ஸ்சுரைசரை வாங்கி தவறாமல் அன்றாடம் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் பாதுகாப்புடன் இருக்கும்.

முகத்தை அதிகமாக தொடுவது

முகத்தை அதிகமாக தொடுவது

தினமும் முகத்தை அளவுக்கு அதிகமாக கையால் தொடுவதால், பல கிருமிகள், அழுக்குகள் போன்றவை சருமத் துளைகளில் தங்கி, அதனால் பருக்கள் அதிகம் வர வழிவகுக்கும். எனவே எப்போதும் கையை சுத்தமாக வைத்துக கொள்வதோடு, அடிக்கடி முகத்தைத் தொடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

பருக்களுக்கு சுய சிகிச்சை அளிப்பது

பருக்களுக்கு சுய சிகிச்சை அளிப்பது

சில ஆண்கள் முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளது என்று, பல ஆண்கள் கடைகளில் பருக்களைப் போக்க உதவும் ஜெல் அல்லது மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி கண்ட ஜெல்களை வாங்கிப் பயன்படுத்தினால், சருமத்தில் பருக்கள் இன்னும் அதிகமாகிவிடும். எனவே முகத்தில் பருக்கள் அதிக அளவில் இருந்தால் தோல் நிபுணரை சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள். அதுமட்டுமின்றி இயற்கை வழியை நாடுங்கள்.

அளவுக்கு அதிகமான ஸ்கரப் செய்வது

அளவுக்கு அதிகமான ஸ்கரப் செய்வது

ஸ்கரப் செய்வதால் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். ஆனால் இதையே அளவுக்கு அதிகமாக செய்து வந்தால், சருமத்தின் ஆரோக்கியம் தான் போகும். எனவே வாரம் இரண்டு முறை செய்தாலே போதுமானது. மேலும் ஸ்கரப் செய்த பின்னர், ஏதேனும் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும். இதனால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Things You're Doing Wrong To Your Skin

The article talks about 7 routinely things that you might be doing that can ruin your skin for good.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter