கோடையில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கும் சமையலறைப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அழகிற்கு இடையூறு விளைவிக்கு பல்வேறு சரும பிரச்சனைகளும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழகு பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கு செல்லாமல் சமையலறைக்கு செல்லுங்கள்.

ஏனெனில் இந்த சரும பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண சமையலறையிலேயே பல பொருட்கள் உள்ளன. கெதிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்தினால், அதனால் சருமத்தின் ஆரோக்கியம் தான் பாழாகும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் சமையலறைப் பொருட்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்துப் பின்பற்றி தான் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும அழுக்கைப் போக்க பேக்கிங் சோடா

சரும அழுக்கைப் போக்க பேக்கிங் சோடா

சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கைப் போக்க, பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தினால் நல்ல மாற்றம் தெரியும். அதிலும் கோடையில் அதிகம் சுற்றுவதால் வியர்வை அதிகரித்து, சரும துளைகள் விரிவடைந்து, அதனுள் அழுக்குகள் நுழைந்து பிம்பிள், கரும்புள்ளிகள் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே இவற்றைப் போக்க பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதனை முகத்தில் பிம்பிள் உள்ள இடத்தில் தடவி தேய்த்து கழுவி வந்தால், பிம்பிள் மறையும்.

முகப்பருவைப் போக்கும் ஸ்ட்ராபெர்ரி

முகப்பருவைப் போக்கும் ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் சாலிசிலிக் ஆசிட் என்னும் பிம்பிளைப் போக்கும் ஆசிட் உள்ளது. எனவே ஸ்ட்ராபெர்ரியை மசித்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

பிங்க் நிற சருமத்திற்கு தக்காளி

பிங்க் நிற சருமத்திற்கு தக்காளி

சருமத்தின் நிறத்தை பிங்க் நிறத்தில் கொண்டு வர, தக்காளியை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

கருவளையத்தைப் போக்க உருளைக்கிழங்கு

கருவளையத்தைப் போக்க உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி, அதனை தினமும் கண்களைச் சுற்றி மசாஜ் செய்து வந்தாலோ அல்லது அதனை அரைத்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவினாலோ, கருவளையம் நீங்கும்.

நகங்களில் உள்ள கறைகளைப் போக்க எலுமிச்சை

நகங்களில் உள்ள கறைகளைப் போக்க எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சி தன்மையால், அவை நகங்களில் உள்ள கறைகளைப் போக்கும். அதற்கு ஒரு காட்டனை எலுமிச்சை சாற்றில் நனைத்து, நகங்களில் தடவி தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வர, மஞ்சள் கறைகள் அகலும்.

சரும நிறத்தை அதிகரிக்க க்ரீன் டீ

சரும நிறத்தை அதிகரிக்க க்ரீன் டீ

க்ரீன் டீ தயாரித்து குளிர வைதது, அதனை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி தேய்த்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, நாளடைவில் முகம் பளிச்சென்று, வெள்ளையாக மாற ஆரம்பிக்கும்.

கடலை மாவு ஃபேஸ் வாஷ்

கடலை மாவு ஃபேஸ் வாஷ்

கடலை மாவைக் கொண்டு தினமும் முகத்தை 5 நிமிடம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்குவதோடு, முகச் சருமம் மென்மையாக இருக்கும்.

சரும சுருக்கத்தைப் போக்க தேன்

சரும சுருக்கத்தைப் போக்க தேன்

சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்கி, சருமத்தின் மென்மையை அதிகரிக்க தேன் பெரிதும் உதவியாக உள்ளது. அதற்கு சிறிது தேனை முகத்தில் தடவி வந்தால், சரும சுருக்கம் நீங்குவதோடு, முகப்பரு போன்றவையும் நீங்கும்.

பொலிவான சருமத்திற்கு மஞ்சள்

பொலிவான சருமத்திற்கு மஞ்சள்

மஞ்சள் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முக சருமத்தில் உள்ள நோய்த்தொற்றுகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Kitchen Ingredients For Beauty Treatments

Kitchen beauty ingredients are homemade & natural home remedies for your face and beauty. To make yourself look beautiful at home try natural home remedies.
Story first published: Monday, April 20, 2015, 12:14 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter