இந்த கஞ்சியை வாரம் 3 முறை குடிங்க.. உடல் எடையும் டக்குன்னு குறையும்.. இரத்தமும் நல்லா ஊறும்...

Posted By:

Weight Loss Kambu Murungai keerai Kanji Recipe In Tamil: நீங்கள் உங்களின் தினசரி காலை உணவில் சிறுதானிய வகைகளைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடித்து வருகிறீர்களா? எப்போதும் ஒரே சுவையில் கஞ்சி செய்து சாப்பிட்டு போடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் கஞ்சி தயாரித்து சாப்பிட வேண்டுமா?

உங்கள் வீட்டில் கம்பும், முருங்கைக்கீரையும் இருந்தால், அவ்விரண்டையும் கொண்டு ருசியான மற்றும் சத்தான கஞ்சியை தயாரிக்கலாம். இந்த கஞ்சியை வாரம் 3 முறை உட்கொண்டு வந்தால், உடல் எடையும் குறையும், இரத்தமும் நன்கு ஊறி, இரத்த சோகை குறைபாடு தடுக்கப்படும்.

Weight Loss Kanji Recipes How To Make a Kambu Murungai Keerai Kanji Recipe

உங்களுக்கு கம்பு முருங்கைக்கீரை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு முருங்கைக்கீரை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கம்பு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* தேங்காய் - 1/4 மூடி
* இஞ்சி - 1/2 இன்ச்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கம்பை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த கம்பை சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் அரைத்த கம்பை சேர்த்து, அத்துடன் 4 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கம்பை கிளறி விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள கம்பை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் சீரகம், வரமிளகாய், தேங்காய், இஞ்சி சேர்த்து அரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் கஞ்சியுடன் சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கம்பு முருங்கைக்கீரை கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 14, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion