Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?

Karadaiyan Nombu 2026: இந்தியாவின் மற்ற பகுதிகளில் இல்லாத சில தனித்துவமான பண்டிகைகள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. அப்படி தமிழ்நாட்டில் பரவலாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகைதான் காரடையான் நோம்பு. 'சாவித்திரி நோன்பு விரதம்' என்றும் அழைக்கப்படும் 'காரடையான் நோன்பு', குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்களால் மிகுந்த பக்தியுடன் கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கியமான விழாவாகும்.

காரடையான் நோன்பு, தமிழ் மாதங்களான 'மாசி' மற்றும் 'பங்குனி' ஆகியவற்றின் இடைக்காலத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதம், மாசி மாதத்தின் கடைசி நாளின் இரவில் தொடங்கி, பங்குனி மாதத்தின் முதல் நாளின் காலையில் நிறைவடைகிறது. சில பகுதிகளில் இது 'காமாட்சி நோன்பு' மற்றும் 'கௌரி நோன்பு' என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய காரடையான் நோன்பு, திருமண வாழ்வில் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

Karadaiyan Nombu 2026 Date Timing Significance Rituals and Mantra

காரடையான் நோம்பு 2026: தேதி மற்றும் நேரம்

காரடையான் நோம்பின் தேதி: மார்ச் 14, 2026 (சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது

விரதம் தொடங்கும் நேரம்: காலை 06:32 - 14 மார்ச் 2026

விரதம் முடியும் நேரம்: 01:08 AM - 15 மார்ச் 2026

மஞ்சள் சரடு கட்ட சரியான நேரம்: 01:08 AM - 15 மார்ச் 2026

வரலாறு மற்றும் முக்கியத்துவம்

காரடையான் நோன்பின் தோற்றம் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த விழா, தனது கணவர் சத்தியவானை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற விதியை மீறிய இளவரசி சாவித்ரியின் கணவர் மீதான பக்தியை நினைவுகூறுகிறது.

சத்தியவானுக்கு ஆயுள் குறைவாக இருக்கும் என்று ஒரு தீர்க்கதரிசனம் கணித்திருந்தது. இருப்பினும், ஆழ்ந்த காதலில் இருந்த சாவித்ரி, இதை அறிந்திருந்தும் சத்தியவானை மணக்க ன்முடிவெடுத்தார். சத்தியவான் இறக்கும் நேரம் வந்தபோது, ​​மரணத்தின் கடவுளான எமதர்மர் அவரது ஆன்மாவை எடுக்க வந்தார். ஆனால் சாவித்ரி, தனது ஞானத்தாலும், பக்தியாலும், எமனுடன் ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டார். அவளுடைய அர்ப்பணிப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்ட எமன், அவருக்கு பல வரங்களை அளித்தார், அவற்றில் ஒன்று சத்தியவானை மீண்டும் உயிர்ப்பித்தது. தனது கணவரின் உயிருக்காக எமனையே எதிர்க்கத் துணிந்த சாவித்திரி இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகிறார்.

இந்த நோன்பு ஒரு மனைவியின் வலிமை, கணவர் மீது கொண்டிருக்கும் அன்பு மற்றும் பக்தியை மதிக்கிறது. சாவித்ரியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்டு, தங்கள் கணவரின் நீண்ட ஆயுள், நல்வாழ்வு மற்றும் நீடித்த திருமணத்திற்காக பிரார்த்தனை செய்ய பல நூற்றாண்டுகளாக இந்த காரடையான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

காரடையான் நோன்பை யாரெல்லாம் பின்பற்ற வேண்டும்?

காரடையான் நோன்பு தமிழ்நாடு முழுவதும் மற்றும் தென் இந்தியாவின் சில பகுதிகளிலும் உள்ள திருமணமான பெண்களால் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், திருமணம் ஆகாத பெண்களும் கூட இந்த சடங்குகளில் பங்கேற்று, எதிர்காலத்தில் தங்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். பெண்கள் இந்த விழாவுக்கான சம்பிரதாயங்களையும், மரபுகளையும் தங்கள் அடுத்த தலைமுறைக்கும் கடத்த விரும்புவதால், தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் ஒரு தருணமாக இத்திருவிழா விளங்குகிறது.

சடங்குகள்

இந்த பண்டிகையானது, தமிழ் மாதங்களான மாசி மற்றும் பங்குனி மாதங்களின் இடைக்காலத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் ஆழ்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன; இவை சாவித்திரியின் பக்தியையும், பார்வதி தேவியின் ஆசீர்வாதத்தையும் பிரதிபலிக்கின்றன.

விரதம் அனுசரித்தல்

நோன்பு கடைபிடிக்கும் பெண்கள் காலை முதலே கடுமையான விரதத்தை மேற்கொள்கின்றனர். முக்கிய பூஜை நிறைவடையும் வரை அவர்கள் உணவருந்துவதைத் தவிர்க்கின்றனர். இவ்விரத அனுசரிப்பானது கணவர் மீதான அர்ப்பணிப்பையும், பக்தியையும் குறிப்பதாக அமைகிறது.

கரடை பிரசாதம்

'கரடை' அல்லது 'அடை' எனப்படும் ஒரு சிறப்பு உணவு, பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது. நீராவியில் வேகவைக்கப்படும் இந்த அரிசிப் பலகாரம், பின்வரும் பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது.

- அரிசி மாவு
- வெல்லம் (இனிப்புச் சுவைக்காக)
- காராமணி (செழிப்பின் அடையாளமாக)
- தேங்காய் (தூய்மையின் அடையாளமாக)
- இது உப்பு சேர்க்காத வெண்ணெயுடன் சேர்த்து, சூடாகப் பரிமாறப்படுகிறது.

இத்திருவிழாவின் மையமாகத் திகழும் இந்த உணவு, விரதத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக, இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது.

பூஜை

இந்த நாளில் பெண்கள் தங்கள் வீட்டின் நுழைவாயிலிலும், பூஜை அறையிலும் கோலமிடுகின்றனர். நீராடிய பிறகு, தாங்கள் தயாரித்த 'அடை'யை கௌரி தேவிக்குப் படைத்து, தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்வாழ்விற்காகவும் பிரார்த்திக்கின்றனர்.

சரடு கட்டுதல்

காரடையான் நோன்பின் முக்கியச் சடங்குகளில் ஒன்று, 'மஞ்சள் சரடு' என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற நூலை கழுத்தில் கட்டிக்கொள்வதாகும். இது இல்லற வாழ்க்கையில் பாதுகாத்தல், நீண்ட மற்றும் செழிப்பான திருமண வாழ்கை மற்றும் திருமண பந்தத்தை வலுப்படுத்துவதை பிரதிபலிக்கிறது.

மந்திரம்

பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக தெய்வீக அருளை வேண்டி, சிறப்பு பாடல்களையும் மந்திரங்களையும் உச்சரிக்கின்றனர். இதில் மிகவும் முக்கியமான மந்திரம் என்னவெனில்,

"தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா"

இதன் அர்த்தம் என்னவெனில் "உருகாத வெண்ணெயும், ஓரடியும் நான் தருவேன், என் கணவருக்கு குன்றாத ஆயுளும், என்னை விட்டு பிரியாதிருக்கும் அருள் தருவாய்" என்பதாகும்.

கலாச்சார முக்கியத்துவம்

காரடையான் நோன்பு மற்ற விரதங்களைப் போல ஒரு வழக்கமான சடங்கு அல்ல, அது திருமண வாழ்வின் கலாச்சாரச் சிறப்பையும், ஒரு பக்திமிக்க மனைவியின் மனவலிமையையும் வலியுறுதுகிறது. மேலும் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதில் பெண்கள் கொண்டுள்ள மன உறுதி, தளராத பக்தி, ஆன்மீக ஆற்றல் மற்றும் திருமண உறவில் புனிதத்தன்மையை எடுத்துரைக்கிறது.

Story first published: Friday, March 13, 2026, 15:45 [IST]
Desktop Bottom Promotion