Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
வங்கித்துறை என்பது உலகின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது. வங்கிகள் இல்லையெனில் இந்த உலகம் எப்படி இருக்குமென்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்தியாவிலும் இதே நிலைதான். இந்தியாவில் வங்கித்துறை பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு நீண்ட மற்றும் சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது.
1935 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சில தனியார் மற்றும் அரசு வங்கிகள் வர்த்தகம், வணிகம் மற்றும் கடன் ஆகியவற்றை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. இந்த வங்கிகள் வெறும் நிதி நிறுவனங்களாக மட்டும் செயல்படவில்லை, அவை காலனித்துவ காலத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார முக்கியத்துவத்தின் அடையாளங்களாக இருந்தன.

இந்தியாவின் ஆரம்ப கால வங்கிகள்
இந்தியாவின் ஆரம்ப கால வங்கிகள் மெட்ராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் போன்ற துறைமுக நகரங்களில் வர்த்தகத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்டன, பிற வங்கிகள் பிரிட்டிஷ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வணிகத்தை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டன. இந்த ஆரம்பகால வங்கிகளில் பல தற்போது ஒரிஜினல் வடிவத்தில் இல்லை என்றாலும், அவை நவீன இந்திய வங்கித்துறைக்கான அடித்தளத்தை அமைத்தன.
இந்தியாவின் முதல் வங்கி
இந்தியாவின் மிகவும் பழமையான வங்கி எதுவென்று கேள்வி கேட்டல் பெரும்பாலான மக்கள் "ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI)" என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இந்தியாவின் முதல் வங்கி 1683-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'மெட்ராஸ் வங்கி' (The Madras Bank) என்பதே உண்மை. ஆனால் இந்த வங்கி இன்று செயல்பாட்டில் இல்லை, இருப்பினும், இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் வங்கி இதுதான். காலப்போக்கில், வேறு பல வங்கிகளும் தோன்றின, அவற்றில் சில வங்கிகள் பல தசாப்தங்களுக்கு நீடித்தன, சில வங்கிகள் விரைவில் மூடப்பட்டன. இவற்றில் பல வங்கிகள் இறுதியில் பெரிய நிதி நிறுவனங்களுடன் இணைந்தன, இதன் விளைவாகவே, இன்று நாம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) என அறியும்-நாட்டின் மிகப் பழமையான, இன்றும் இயங்கிவரும் வங்கி உருவாகியது.
மதராஸ் வங்கி (1683)
இந்தியாவின் மிகவும் பழமையான வங்கியின் பெயர் 1683 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் (தற்போது சென்னை) நிறுவப்பட்ட மெட்ராஸ் வங்கிக்கு சொந்தமானது. இந்தியா சர்வதேச வர்த்தகத்தின் மையமாக இருந்த காலத்தில் பிரிட்டிஷ் வர்த்தகர்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த வங்கி உருவாக்கப்பட்டது.
கிட்டதட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு 1843 ஆம் ஆண்டு சென்னை வங்கியுடன் இணைக்கப்பட்டு பின்னர் இம்பீரியல் வங்கியின் ஒரு பகுதியாக மாறியதால் இந்த வங்கி தற்போது இல்லை என்றாலும், இந்த இணைப்பின் காரணமாகவே இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட வங்கி தொடங்கப்பட்டது. இந்த இம்பீரியல் வங்கிதான் இறுதியாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவாக மாறியது. இந்தியாவின் வங்கித்துறையின் தொடக்கம் நம் சென்னையிலிருந்துதான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ராஸ் வங்கியைத் தொடர்ந்து பேங்க் ஆப் பாம்பே(1720), பேங்க் ஆப் ஹிந்துஸ்தான்(1770), ஜெனரல் பேங்க் ஆப் பெங்கால் அண்ட் பீஹார்(1773), பெங்கால் பேங்க்(1784), ஜெனரல் பேங்க் ஆப் இந்தியா(1786) போன்ற பல வங்கிகள் திறக்கப்பட்டன. இதில் சில வங்கிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன, சில வங்கிகள் மூடப்பட்டன.
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட வங்கி என்ற சிறப்பை 'மெட்ராஸ் வங்கி' (1683) பெற்றிருந்தாலும், இன்றும் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான வங்கி என்ற பெருமையை 'பாரத ஸ்டேட் வங்கி' (1806-இல் 'கல்கத்தா வங்கி'யாகத் தொடங்கப்பட்டது) கொண்டுள்ளது. இந்த வங்கிகள் வர்த்தகம் மற்றும் கடன் பரிவர்த்தனைகளை நிர்வகித்தது மட்டுமல்லாமல், இந்தியாவில் நவீன வங்கித் துறைக்கான அடித்தளத்தையும் அமைத்தன.



Click it and Unblock the Notifications
