Latest Updates
-
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Tomato Rice In Tamil: காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு தக்காளி சாதம் ரொம்ப பிடிக்குமா? எப்போதும் ஒரே மாதிரி தான் தக்காளி சாதத்தை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்து கொடுங்கள். இதனால் டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும்.

உங்களுக்கு இந்த தக்காளி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 1/2 கப்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 1
* கல்பாசி - சிறிது
* வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* புதினா - 1/2 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 1/2 கப்
* ஊற வைத்த பாசுமதி அரிசி
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ,
ஏலக்காய், கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து, 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 2 1/2 கப் நீரை ஊற்றி
நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாசுமதி அரிசியை நீரை
வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, மூடி வைத்து, உயர் தீயில் வைத்து 1
விசில் விட்டு, பின் குறைவான தீயில் 5 நிமிடம் வைத்து இறக்கி, விசில்
போனதும் குக்கரைத் திறந்தால், தக்காளி சாதம் தயார்.



Click it and Unblock the Notifications