Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
இந்தியாவின் மிகவும் முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றான நவராத்திரி முடிந்து விட்டது. இந்த வருடம் நவராத்திரி மற்றும் மகா நவமி அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட்டன. ஜோதிடரீதியாக, இந்த காலகட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய சக்திவாய்ந்த கிரகங்கள் துலாம் ராசியில் ஒன்றாக இணைய உள்ளன.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனும், சுக்கிரனும் இணையும்போது 'சுக்ராதித்ய யோகம்' உருவாகிறது; அதேபோல், சூரியனும் புதனும் இணையும்போது 'புதாதித்ய யோகம்' உருவாகிறது. இந்த இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தீவிரமாக பிரதிபலிக்கும். இருப்பினும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள், இந்த யோகங்களால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு, நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகளும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பதற்கான சூழலும் அமையக்கூடும். நவராத்திரிக்கு பிறகு ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
நவராத்திரிக்கு பிறகான காலகட்டம் மேஷ ராசியிக்காரர்களுக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கலாம், இது தொழில் வளர்ச்சிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை அல்லது முயற்சிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் தகவல் தொடர்புத் திறன்கள் மேம்படும், இது மற்றவர்களை எளிதில் ஆள்வதற்கு அவர்களுக்கு உதவும். இதன் விளைவாக அவர்களின் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், மேலும் அவர்கள் அனைத்து வகையான ஆடபம்பர இன்பங்களையும் பெறலாம். உங்களின் பழைய முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும், மேலும் உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் இப்போது தீர்க்கப்படும். நிதி நிலை அதிகரிப்பதால் சேமிப்பும் உயரும். அலுவலகத்தில் சம்பளம் மற்றும் பதவியில் உயர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலா ராசியினருக்கு நவராத்திரிக்குப் பிறகான காலம் மகிழ்ச்சியான காலகட்டமாக அமையக்கூடும். கடந்த கால முயற்சிகள் நல்ல பலன்களைத் தரத் தொடங்கலாம், வியாபாரிகளுக்கு லாபத்தை அதிகரிக்கப் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவக்கூடும், மேலும் குடும்பத்தில் முக்கியமான அல்லது சுப நிகழ்வு ஒன்று நடைபெற வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம், இனி அவர்கள் பணப்பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள்.
திருமணமான தம்பதிகள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். மேலும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் கூடிவரும். மொத்தத்தில் இது அவர்களுக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாக இருக்கப்போகிறது. இப்போது தொழில் ரீதியாகப் புதிய வாய்ப்புகள் உருவாகலாம், அதே வேளையில் நிதி நெருக்கடிகள் குறையக்கூடும். இந்த காலகட்டத்தில் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் திருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரட்டை ராஜயோகம் உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடும், மேலும் உங்கள் சமூக அந்தஸ்தை அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்குவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான காலம்.
திருமணமானவர்களுக்கு உங்கள் உறவில் அரவணைப்பும், புரிதலும் அதிகரிக்கும். நிதி நிலை மற்றும் மன நிம்மதி உங்கள் வாழ்க்கையில் மேலும் நிறைவை உணர உதவும். ஒட்டுமொத்தமாக, இந்த யோகம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

