அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..

Mercury Retrograde In Libra On 24 October 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசி மற்றும் நிலையை மாற்றக்கூடியவர். தற்போது புதன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி புதன் துலாம் ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி தனது பயணத்தை தொடங்கவுள்ளார்.

Mercury Retrograde In Libra On 24 October 2026 These Zodiac Signs Should Be Careful

புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் வேலை தாமதங்கள், நிதிச் சிக்கல்கள் மற்றும் உறவுகளில் தவறான புரிதல்களை எதிர்கொள்ளக்கூடும். மேலும் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்போது புதன் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தம்பதிகள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் ரீதியான முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முதலீடுகளையும் செய்வதையோ அல்லது கடனாக பணம் கொடுப்பதையோ விர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பணம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அது பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணை அல்லது தொழில் கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வேலை அல்லது தொழிலில் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன், அதன் விதிமுறைகளை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்கும். இருப்பினும் அது தீவிரமடையாமல் இருக்க வேண்டுமானால் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேலைகளில் தாமதங்கள் ஏற்படலாம். உயர் அதிகாரிகளுடன் பேசும் போது தெளிவாக தொடர்பு கொள்ள வேண்டும். பணி மாற்றம் செய்யத் திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஒரு புதிய வணிக ஒப்பந்தத்தில் ஈடுபட விரும்பினாலோ, உங்கள் முடிவை எடுப்பதற்கு முன் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீன ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகள், முதலீடுகள் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முழுமையான தகவல் ஏதும் இல்லாமல் எந்த ஒரு பண பரிவர்த்தனைகளையும் செய்ய வேண்டாம். உறவுகளில் கூட, ஒரு சிறிய தவறான புரிதல் தீவிரமானதாக மாறாமல் இருக்க, தெளிவாகப் பேசுவது அவசியம். இந்தக் காலகட்டத்தில், சிந்தித்து எடுக்கும் முடிவுகள் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 21, 2026, 17:46 [IST]
Desktop Bottom Promotion