வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது!

Vastu Tips In Tamil: நாம் அனைவருமே நமது வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக வீட்டை பல்வேறு பொருட்களால் அலங்கரிக்கவும் செய்வோம். அதில் சிலருக்கு செடிகளால் வீட்டை அலங்கரிக்க பிடிக்கும். இன்னும் சிலருக்கு பல அழகான ஓவியங்களால் வீட்டை அழகுப்படுத்த பிடிக்கும். ஓவியங்கள் வீட்டிற்கு புதிய தோற்றத்தை அளிப்பதோடு, மனதிற்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் வைக்கப்படும் ஓவியங்கள் நேர்மறை எண்ணங்களையும் நல்ல ஆற்றலையும் ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது.

Vastu Tips Best Paintings To Hang On Your Home Walls To Attract Luck

அதுவும் இந்த ஓவியங்களை சரியான திசையில் வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீட்டில் செல்வம் பெருகவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவும் சில குறிப்பிட்ட ஓவியங்களை வைக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஓடும் 7 குதிரைகள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை காட்சிகள் போன்ற ஓவியங்களை வைப்பது நல்லது.

இப்படியான ஓவியங்கள் நம்பிக்கை, வளர்ச்சி, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. இப்போது வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் ஓவியங்கள் எவை மற்றும் அவற்றை வீட்டில் எந்த இடத்தில் வைக்கலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஏழு குதிரைகள் ஓவியம்

வாஸ்துப்படி வீட்டில் வைக்க பரிந்துரைக்கப்படும் சிறந்த ஓவியங்களுள் ஒன்று தான் ஏழு குதிரைகள் ஓவியம். அதுவும் இந்த ஓவியத்தின் பின்னணியில் நீல நிறத்துடன் அல்லது சூரிய அஸ்தமன வானத்துடன், வெள்ளைக் குதிரைகள் நீரிலோ அல்லது மணலிலோ ஓடுவது போல இருப்பது மிகவும் நல்லது. பொதுவாக குதிரைகளானது வேகம், வெற்றி மற்றும் வலிமையின் சின்னங்களாகும். இந்த ஓவியத்தை வீட்டில் வைக்கும் போது, அது வீட்டில் சமநிலையையும் நல்லிணக்கத்தையும், ஆற்றலையும், மன உறுதியையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக இந்த வகை ஓவியத்தை கிழக்கு சுவர்களில் தொங்கவிட வேண்டும்.

மலை ஓவியம்

இயற்கையை அணுஅணுவாய் ரசிப்பவர்கள் மலை ஓவியத்தை வீட்டில் வைக்கும் போது, அது வாழ்வில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். மேலும் இப்படியான ஓவியம் வீட்டின் சுவற்றினை அழகாக வெளிக்காட்டவும் செய்யும். இப்படிப்பட்ட ஓவியத்தை தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைக்கலாம்.

நீர்வீழ்ச்சி ஓவியம்

வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய ஓவியங்களுள் ஒன்று தான் நீர்வீழ்ச்சி ஓவியம். இந்த வகை ஓவியம் மனதிற்கு இதமளிப்பதாகவும், வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் கருதப்படுகிறது. மலையில் இருந்து நீர் பாய்வது, ஏரிகளில் நீர் பாய்ந்தோடுவது போன்ற ஓவியங்களை வைக்கும் போது, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி, புதிதாக வாழ்க்கையைத் தொடங்க உதவும். ஆனால் இருண்டதாக, கண்களுக்கு இனிமையற்றதாக இருக்கும்படியான நீர்வீழ்ச்சி ஓவியங்களை தவிர்க்க வேண்டும். வாஸ்துப்படி நீர்வீழ்ச்சி ஓவியங்களை வீட்டின் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்குச் சுவரில் தொங்கவிடலாம்.

மயில் ஓவியம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி மயில் ஓவியத்தை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த மயில் ஓவியத்தில் மனதைக் கவரும் வண்ணங்கள் இருப்பதால், அது அந்த இடத்திற்கு அழகையும் மகிழ்ச்சியையும் சேர்க்கின்றன. மேலும் மயில் உயிர்ச்சக்தி மற்றும் செழிப்பின் சின்னங்களாகவும் விளங்குகின்றன. இந்த மயில் ஓவியத்தை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, October 21, 2026, 22:18 [IST]
Desktop Bottom Promotion