12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Jupiter Mars Conjunction Forms Guru Mangal Yog In Leo 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றும் குரு பகவான் அதிசாரமாக அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். மறுபுறம் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.

Jupiter Mars Conjunction Forms Guru Mangal Yog In Leo 2026 List Of Lucky Zodiac Signs

அந்த வகையில் நவம்பர் மாதத்தில் செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் நவம்பர் 12 ஆம் தேதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களின் சேர்க்கை நிகழும்.

ஜோதிடத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. முக்கியமாக இந்த கிரகங்களின் சேர்க்கையானது சிம்ம ராசியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இந்த கிரக சேர்க்கையால் குரு மங்கள யோகம் உருவாகிறது.

இந்த யோகமானது செல்வம் மற்றும் சொத்து சேர்க்கை, திறமை மற்றும் தைரியத்தில் அதிகரிப்பு, புகழ் மற்றும் கௌரவம், தொழில் முன்னேற்றம் போன்றவற்றை தரக்கூடியது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இப்போது 12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் குரு மங்கள யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ராஜவாழ்க்கையை வாழ்வார்கள். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் இந்த யோக காலத்தில் கைக்கு கிடைக்கும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளைக் காண்பீர்கள். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. முதலீடுகளுக்கு இக்காலம் மிகவும் உகந்ததாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் குரு மங்கள யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை தேடி வரும். தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். குறிப்பாக வியாபாரம், வணிகத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மொத்தத்தில் குருவும், செவ்வாயும் நல்ல நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புக்களை அளிப்பார்கள். இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் குரு மங்கள யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. வரும் ஆண்டுகளில் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பீர்கள். நீங்கள் நிதி ரீதியாக நல்ல பலனைப் பெறுவீர்கள். முக்கியமாக புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 21, 2026, 23:40 [IST]
Desktop Bottom Promotion