Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
Guru Purnima 2026: வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29 ஆம் தேதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாளில் பல சுப யோகங்கள் உருவாகின்றன. குறிப்பாக இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களின் திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்ய திட்டமிட்டிருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கும்பம்
குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடந்தால், பெரிய வெற்றியைக் காணலாம். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கி, பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மகரம்
குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடித்து, பாராட்டைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
