வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க..

Mirror Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு சொர்க்கமாக இருக்க வேண்டுமானால், அந்த வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வாஸ்துப்படி கட்டப்பட்டுள்ள வீட்டில் தான் நேர்மறை ஆற்றல் ஓட்டம் நிரம்பியிருக்கும். குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால் தான், வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் மற்றும் அந்த வீட்டில் உள்ளோரும் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

Mirror Vastu 5 Places You Should Never Keep Mirror At Home Brings Bad Luck

மேலும் வீட்டில் வைக்கப்படும் பொருட்களும் வாஸ்து விதிகளின் படி சரியான இடத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக, வீட்டில் வைக்கும் காலெண்டர் ஆகட்டும், கடிகாரம் ஆகட்டும், ஏன் முகம் பார்க்கும் கண்ணாடி கூட சரியான இடத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

என்னது, முகம் பார்க்கும் கண்ணாடி கூடவா என்று கேட்கலாம். ஆம், கண்ணாடியானது நமது அழகை காண உதவலாம். இது தவிர கண்ணாடிகளானது ஒரு அறையை பெரியதாகவும், பிரகாசமாகவும் காட்ட உதவி புரிகின்றன. வாஸ்து சாஸ்திரத்தில், கண்ணாடிகளின் திசையும், இருப்பிடமும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. கண்ணாடியை சரியான இடத்தில் வைக்கும் போது, அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவி புரியும். அதுவே தவறான இடத்தில் வைத்தால், அது வீட்டு சூழலையே மோசமாக்கிவிடும்.

உங்களுக்கு இதுவரை கண்ணாடியை வீட்டின் எந்த இடத்தில் வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பது பற்றி தெரியாதெனில், கீழே வீட்டில் கண்ணாடி வைப்பதற்கான 5 முக்கியமான வாஸ்து விதிகள் குறித்து காண்போம்.

1. தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் வைக்காதீர்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்ணாடியை வீட்டில் வைப்பதாக இருந்தால், தெற்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வாஸ்துப்படி, கண்ணாடியை வைக்க சிறந்த திசைகள் என்றால் அது வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் தான். அதில் வடக்கு திசையானது செல்வம் மற்றும் செழிப்புடனும், கிழக்கு நேர்மறை ஆற்றலுடனும் தொடர்புடையது. எனவே இந்த திசைகளை நோக்கியவாறான சுவர்களில் கண்ணாடிகளை வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

2. பிரதான வாசல் கதவுக்கு முன் வைக்காதீர்

வாஸ்துப்படி, வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரில் கண்ணாடி வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்விடத்தில் கண்ணாடியை வைத்தால், கதவின் வழியாக நுழையும் நேர்மறை ஆற்றல் கண்ணாடியால் மீண்டும் வெளியே பிரதிபலிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. ஆகவே நுழைவாயிலுக்கு எதிரில் கண்ணாடியை வைக்காமல், பக்கவாட்டு சுவற்றில் கண்ணாடியை தொங்கவிடுங்கள்.

3. படுக்கைக்கு முன் கண்ணாடியை வைக்காதீர்

வாஸ்துப்படி, கண்ணாடியை படுக்கையில் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் படுக்கையின் பிம்பம் கண்ணாடியில் தெரியக்கூடாது. அப்படி படுக்கை கண்ணாடியில் தெரியுமாறு வைத்தால், அது அமைதியின்மையையும், தூக்க பிரச்சனைகளையும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே படுக்கை அறையில் கண்ணாடி வைப்பதாக இருந்தால், படுக்கை தெரியாதவாறு வையுங்கள்.

4. உடைந்த கண்ணாடியை வைத்திருக்கக்கூடாது

வாஸ்துப்படி, உடைந்த அல்லது விரிசல் உள்ள கண்ணாடியை வீட்டில் வைத்திருப்பது அசுபமானதாக கருதப்படுகிறது. இப்படி உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இப்படிப்பட்ட கண்ணாடியை உடனே அப்புறப்படுத்துங்கள்.

5. அசுத்தமான கண்ணாடி கூடாது

வாஸ்துப்படி முகம் பார்க்கும் கண்ணாடி எப்போதும் சுத்தமாகவும், நல்ல நிலையிலும் இருக்க வேண்டும். மேலும் கண்ணாடியை பார்க்கும் போது, அதில் குப்பை, உடைந்த பொருட்கள் அல்லது அசுத்தமான பகுதிகள் தெரியாதவாறு சுத்தமான மற்றும் நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, September 10, 2026, 19:10 [IST]
Desktop Bottom Promotion