செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்..

Mercury Transit In Libra On 26 September 2026: ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்கள் ஒரு ராசியில் பயணிக்கக்கூடியவர். இந்த புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Mercury Transit In Libra On 26 September 2026 These Zodiac Signs Will See Career Growth And Money Gain

தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியின் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் செப்டம்பர் 26 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த புதன் பெயர்ச்சி வியாபாரம், வேலை வாய்ப்பு, நிதி விஷயங்கள் போன்றவற்றில் சிறப்பான பலன்களைத் தரும்.

துலாம் ராசிக்கு செல்லும் புதனின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் அந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம், நிதி நிலையில் உயர்வு போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது துலாம் ராசிக்கு செல்லும் புதனால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. பேச்சாற்றல் மேம்படும். இந்த பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை திறம்பட யோசித்து எடுப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களால் தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படலாம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வருமானத்தில் உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் திறமையும், முடிவெடுக்கும் திறனும் பாராட்டப்படலாம். தொழிலதிபர்கள் புதிய நட்புகளால் நல்ல பலனைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 9, 2026, 23:45 [IST]
Desktop Bottom Promotion