செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Budhaditya Rajyog In Virgo On 17 September 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கமும், கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் ஒன்றிணைவதால் உருவாகக்கூடிய யோகம் தான் புதாதித்ய ராஜயோகம். இந்த யோகமானது தொழில், வியாபாரம், நிதி நிலை போன்றவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட ராஜயோகம் செப்டம்பர் மாதத்தில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகம் கன்னி ராசியில் உருவாகிறது.

Budhaditya Rajyog In Virgo On 17 September 2026 These Zodiac Signs Will See Financial Growth

பஞ்சாங்கத்தின் படி, செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இப்படி நுழையும் போது அந்த ராசியில் ஏற்கனவே இருக்கும் புதனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். அதன் பின் புதன் துலாம் ராசிக்குள் நுழைவார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது கன்னி ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முடிக்க முடியாமல் இருந்த பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக பணியிடத்தில் தன்னம்பிக்கையும், செல்வாக்கும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வணிகர்களுக்கு தங்களின் புதிய திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிப்பீர்கள் மற்றும் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இருந்தாலும் எந்த ஒரு நிதி முடிவுகளை எடுக்கும் போதும் எச்சரிக்கையால் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பண விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்த்து, நன்கு யோசித்து திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலனைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, September 10, 2026, 10:48 [IST]
Desktop Bottom Promotion