Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள்
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி!
World Hepatitis Day 2026: தற்போது நிறைய பேர் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கின்றனர். இப்படி சந்திக்கும் உடல் சோர்வுக்கு பரபரப்பான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை தான் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஆனால் இவற்றால் சந்திக்கும் உடல் சோர்வு போதுமான ஓய்வு எடுத்த பின் சரியாகிவிடும்.

ஆனால் எவ்வளவு ஓய்வு எடுத்த பின்னரும் உடல் சோர்வு நீங்காமல் இருந்தால், அது உடலில் உள்ள தீவிரமான ஒரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக அது ஹெபடைடிஸ் ஆக கூட இருக்கலாம். ஹெபடைடிஸ் என்பது உடலின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான உறுப்பான கல்லீரலில் ஏற்படும் ஒரு வகையான அழற்சியாகும். இந்த அழற்சி அமைதியாக கல்லீரலை சேதப்படுத்தும். மிகவும் தீவிரமான நிலையில் பல அறிகுறிகளை வெளிக்காட்டும்.
இந்த ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேத உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, வைரஸ் ஹெபடைடிஸ் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுக்குக் காரணமாகிறது.
இப்படி ஹெபடைடிஸ் மூலம் இறப்பு ஏற்பட முக்கிய காரணம், நிலைமை முற்றிய பின் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்வது தான். உண்மையில் ஹெபடைடிஸை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், உயிரிழப்பை தடுக்கலாம். இப்போது உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு ஒரு போதும் புறக்கணிக்கக்கூடாத 10 ஆரம்ப கால ஹெபடைடிஸ் அறிகுறிகள் குறித்து காண்போம்.
1. உடல் சோர்வு
ஹெபடைடிஸின் ஆரம்பகால அறிகுறிகளுள் ஒன்று தான் மிகுந்த உடல் சோர்வு. எந்த காரணமும் இல்லாமல், நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், கல்லீரலில் அழற்சி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அழற்சியடைந்த கல்லீரல் செல்கள் அத்தியாவசிய வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளைச் செய்யத் திணறுவதால், அப்படியானால் உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது.
2. பசியின்மை
காரணம் ஏதும் இல்லாமல் திடீரென்று உணவின் மீதான நாட்டம் குறைகிறதா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அது ஹெபடைடிஸின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். ஹெபடைடிஸ் பெரும்பாலும் செரிமானத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும். இதன் காரணமாகவே பசியின்மையை சந்திக்க நேரிடுகிறது.
3. குமட்டல் மற்றும் வாந்தி
உணவு உண்ட பின் குமட்டல் மற்றும் வாந்தி வருகிறதா? அப்படியானால் கல்லீரல் நச்சுக்களைச் செயலாக்குவதிலும் கொழுப்புகளைச் செரிப்பதிலும் திறனற்று இருப்பது காரணமாக இருக்கலாம். அதுவும் இந்த அறிகுறி எப்போதாவது ஏற்பட்டாலும், இது தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. அடர் நிற சிறுநீர்
நிறைய நீரை அருந்திய பின்னரும், சிறுநீர் அடர் நிறத்தில் வெளியேறினால், அதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். அது ஹெபடைடிஸின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக கல்லீரல் வெளியிடும் பிலிரூபின் என்ற மஞ்சள் நிறமி இரத்தத்தில் அதிகரித்து சிறுநீர் வழியாக வெளயேற்றப்படும் போது இப்படியான அடர் நிற சிறுநீர் வெளியேறும். மேலும் கண்களும், சருமமும் மஞ்சள் நிறத்தில் தென்பட்டால், அது மஞ்சள் காமாலை என்னும் ஹெபடைடிஸின் முக்கிய அறிகுறியாகும்.
5. மேல் வலது அடிவயிற்று வலி
கல்லீரலானது வலது விலா எலும்புக்கு கீழே அமைந்துள்ளது. எனவே கல்லீரலில் அழற்சி தீவிரமாக இருந்தால், மேல் வலது அடிவயிற்று பகுதியில் மந்தமான வலியை சந்திக்கலாம். இருப்பினும் இப்படியான வலி அனைவருக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், தொடர்ந்து இந்த பகுதியில் அசௌகரியத்தை சந்தித்தால், அதை புறக்கணிக்காதீர்கள்.
6. சரும அரிப்பு
சருமத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் காரணமின்றி தொடர்ந்து அரிப்பை சந்தித்தால், அது கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் இந்த அரிப்பு இரவு நேரத்தில் தீவிரமாக இருக்கும்.
7. காய்ச்சல் மற்றும் சளி
கடுமையான வைரஸ் ஹெபடைடிஸ் ஆரம்பத்தில் சளி காய்ச்சலைப் போலவே இருக்கலாம். அதுவும் இது லேசான காய்ச்சல், தசை வலிகள், தலைவலி மற்றும் பொதுவான உடல் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் ஒரு பருவகால வைரஸ் தொற்று எனத் தவறாகக் கருதப்படுகின்றன.
8. காயம் எளிதில் ஏற்படுவது
ஒருவருக்கு ஹெபடைடிஸ் தீவிரமாக இருந்தால், அத்தகையவரின் உடலில் இரத்தம் உறைவதற்குக் காரணமான புரதங்கள் கல்லீரலால் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி சிராய்ப்புகள், ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவை ஏற்படலாம்.
யாருக்கெல்லாம் ஹெபடைடிஸ் வர வாய்ப்புள்ளது?
* பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு கொண்டவர்கள்
* அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள்
* உடல் பருமன் அல்லது கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்கள்
* ஊசிகளை பகிர்ந்து கொண்டவர்கள்
* மோசமான சுகாதார வசதிகள் உள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்பவர்கள் போன்றோருக்கு ஹெபடைடிஸ் வர வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications