கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க..

Dark Circle Remedies In Tamil: ஒருவரது முகத்தை அழகாக காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட கண்களின் அழகைக் கெடுக்கும் ஒரு சரும பிரச்சனை தான் கருவளையங்கள். இந்த கருவளையங்களானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் சோர்வு, உடல் வறட்சி, மரபணுக்கள், முதுமை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Top 5 DIY Under-Eye Masks To Remove Dark Circles

இதில் மரபணுக்களால் வரக்கூடிய கருவளையங்களைத் தவிர, மற்ற அனைத்து காரணங்களால் வரக்கூடிய கருவளையங்களையும் போதுமான பராமரிப்பு கொடுப்பதன் மூலம் போக்கலாம். முக்கியமாக ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு ஐ-மாஸ்க்குகளை போடுவதன் மூலம், கருவளையங்களைப் போக்கலாம். இப்போது அந்த ஐ-மாஸ்க்குகள் என்னவென்பதைக் காண்போம்.

1. வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை மாஸ்க்

* இதற்கு சிறிது வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி பிளெண்டரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

2. உருளைக்கிழங்கு மற்றும் தேன் மாஸ்க்

* இதற்கு உருளைக்கிழங்கை துருவியோ அல்லது அரைத்து சாறோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.
* அதன் பின் 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

3. க்ரீன் டீ மற்றும் தயிர் மாஸ்க்

* இதற்கு க்ரீன் டீ தூளுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும்.

4. மஞ்சள் மற்றும் பால் மாஸ்க்

* இதற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கண்களைச் சுற்றி தடவி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு கண்களை குளிர்ச்சியான நீரால் கழுவ வேண்டும்.

5. ரோஸ் வாட்டர்

* இதற்கு காட்டன் பேடுகளை ரோஸ் வாட்டரில் நனைக்க வேண்டும்.
* பின் கண்களை மூடிக் கொண்டு, அதன் மேல் ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேடுகளை வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், கண்கள் ரிலாக்ஸாகி, கருவளையங்கள் மறையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, July 28, 2026, 20:03 [IST]
Desktop Bottom Promotion