Latest Updates
-
அக்டோபர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (25 October 2026-31 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
Aippasi Annabhishekam 2026: ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்? -
குரு பெயர்ச்சி 2026: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? -
தலைமுடி எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்... -
வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்..
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..
Bachelor Style Chicken Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் வாங்குவீர்களா? எப்போது சிக்கன் வாங்கினாலும் ஒரே சுவையில் தான் சிக்கன் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை செய்து சாப்பிடுங்கள். அதுவும் சிக்கனை மசாலா பொருட்களை சேர்த்து பிசைந்து, மசாலா ஒன்றை அரைத்து சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து ஊற வைத்து, குக்கரில் விசில் விட்டு இறக்குங்கள். இப்படி சிக்கனை செய்யும் போது சுவையும் பிரமாதமாக இருக்கும, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பேச்சுலர் ஸ்டைல் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பேச்சுலர் ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* இஞ்சி - 4 துண்டு
* பச்சை மிளகாய் - 4
* பூண்டு - 10 பல்
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* புதினா - 10-15 இலைகள்
பிற பொருட்கள்..
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 3/4 கிலோ
* அரைத்த விழுது
* தயிர் - 1/2 கப்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்த பெரிய வெங்காயம் - 3
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 5
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பூண்டு,
கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கழுவிய சிக்கன்,
அரைத்த இஞ்சி பூண்டு மல்லி விழுது, தயிர் ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத்
தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 3 வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிய, எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக நன்கு வறுத்து எடுத்து, அவற்றை சிக்கனுடன் நசுக்கி சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் ஒரு தாளிப்பு கரண்டியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதை சிக்கனுடன் அப்படியே ஊற்றி சிக்கனை நன்கு கலந்து விட
வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, விசில் போடாமல் உயர் தீயில்
வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின் விசிலைப் போட்டு, உயர் தீயில் 1 விசிலும், குறைவான தீயில் 2
விசிலும் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான சிக்கன் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications
