Latest Updates
-
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா?
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Aadi Pournami 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள், சேர்க்கை மற்றும் அவற்றின் பார்வையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை 29 ஆம் தேதி அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரனும், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாயும் சேர்ந்து மிகவும் மங்களகரமான கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர். முக்கியமாக இந்த யோகமானது ஆடி மாத பௌர்ணமியில் உருவாகிறது.

ஜோதிடத்தின் படி, இரண்டு செல்வாக்குமிக்க கிரகங்கள் ஒருவருக்கொருவர் 4 ஆவது மற்றும் 10 ஆவது வீடுகளில் இருக்கும் போது கேந்திர திருஷ்டி யோகம் உருவாகும். அப்படி தான் சுக்கிரனும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் 4 ஆவது மற்றும் 10 ஆவது வீடுகளில் இருந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர். ஆடி பௌர்ணமியில் உருவாகும் இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ரியல் எஸ்டேட், ஃபேஷன் போன்றவற்றுடன் தொடர்புடைய தொழிலில் இருப்பவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
துலாம்
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மகரம்
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
