ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்!

Rahu Ketu Peyarchi 2026 Palangal In Tamil: நவகிரகங்களில் பாம்பு கிரகங்கள் எனப்படும் நிழல் கிரகங்களான ராகுவும்,கேதுவும் மனிதர்களுக்குள் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் ராகு கேது பெயர்ச்சியை பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்ப்பார்கள். பொதுவாக ராகுவும் கேதுவும் எந்த ராசியில் இருக்கின்றதோ அதுதான் அவர்களின் வீடு.

அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் ராகுவும் கேதுவும் ராசியை மாற்றவுள்ளனர். அப்பெயர்ச்சியால் ராகு சனி பகவானைப் போலவும் கேது பகவான் சந்திரனைப் போலவும் செயல்படுவார். இந்த இடப்பெயர்ச்சி 18 மாதங்களுக்கு நீடிக்கும். வேத ஜோதிட கணக்கீட்டின்படி, 2026 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 8:03 மணிக்கு ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் தங்கள் ராசிகளை மாற்றப் போகிறார்கள்.

Rahu Ketu Peyarchi 2026 Palangal Mesham To Kanni Rasi Predictions By Astrologer Jeyalakshmi

கேது ஆன்ம காரகன் கடன், மன உளைச்சல், மன சஞ்சலம், மன விரக்தியை அதிகப்படுத்துவார். ராகு என்றால் ஆயுள் கண்டம், மரண பயம், நஷ்டம் பிரச்சினை, போலீஸ் பிரச்சினை உண்டாகும். பண வரவையும் கொடுத்து செலவும் செய்ய வைப்பார் ராகு. அதேப் போல் மன சஞ்சலம் கொடுத்து கஷ்டப்படுத்துவார் கேது.

டிசம்பர் மாதம் முதல் சனி வீட்டில் பயணம் செய்யும் ராகுவினாலும், சந்திரனின் வீட்டில் பயணம் செய்யும் கேதுவினாலும் உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. அதே போல மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான யோகத்தை தரப்போகின்றன என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார்.

மேஷம்

"மேஷ ராசியின் பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் ராகு பதவியை தருவார். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு அரசியல் தொடர்புகள் ஏற்படும். தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. தொழில் செய்பவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டி வரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்" என்று ஜோதிடர் ஜெயலட்சுமி கூறினார்.

ரிஷபம்

"ரிஷப ராசியின் பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகு பண தட்டுப்பாடுகளை நீக்குவார். பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்" என்று ஜோதிடர் ஜெயலட்சுமி கூறினார்.

மிதுனம்

"புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் பயணம் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. விபரீத ராஜயோகத்தால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உங்களுடைய வீட்டில் திருமணம் சுபகாரியம் நடக்கும். நீதிமன்ற வழக்கு சாதகமாகும். இடமாற்றம், ஊர்மாற்றம் நேரலாம். சொல்லும் செயலும் வெற்றி பெறும். பண விஷயத்தில் வாக்கு கொடுக்கும் முன்பாக கவனம் தேவை" என்று ஜோதிடர் ஜெயலட்சுமி கூறினார்.

கடகம்

"சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு ராசியில் குரு பயணிக்கும் அதே நேரத்தில் ராசியில் கேது இணைந்து பயணம் செய்வதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தியாக இருக்கப் போகிறது. ராகு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம்" என்று ஜோதிடர் ஜெயலட்சுமி கூறினார்.

சிம்மம்

"ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப் போகிறார்.நோய்கள் நீங்கும், கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிரி, போட்டி, பொறாமை, கடன், வைத்திய செலவு ஆகிய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் சந்தான யோகம் தேடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும். உங்களை இதுநாள் வரைக்கும் வாட்டி வதைத்த பிரச்சினைகள் தீரப்போகிறது. அதே போல கேது விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டில் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. சொந்த பந்தங்களிடம் பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம்" என்று ஜோதிடர் ஜெயலட்சுமி கூறினார்.

கன்னி

"ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டிற்குள் பயணம் செய்யப் போவதால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி, அன்பும் பாசமும் அதிகரிக்கும். சிலருக்கு இட மாற்றங்கள் ஏற்படும். புது முயற்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கேது பகவான் லாப வீட்டில் அமர்ந்து பயணம் செய்யப் போவதால் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்" என்று ஜோதிடர் ஜெயலட்சுமி கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, September 11, 2026, 10:16 [IST]
Desktop Bottom Promotion