Latest Updates
-
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
Home Remedies To Strengthen Hair In Tamil: தலையில் கையை வைத்தாலே கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா? இதைப் பார்க்கும் போது மனசு வலிக்கிறதா? இதற்கு இயற்கை வழியில் தீர்வு காண வேண்டுமா? ஒருவருக்கு தலைமுடி அதிகளவில் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மன அழுத்தம், மாசுபாடு, மோசமான உணவு மற்றும் ஸ்டைலிங் பொட்களின் அதிகப்படியான பயன்பாடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி, தலைமுடிக்கு போதுமான பராமரிப்பு கொடுக்காமல் இருந்தாலும், தலைமுடி பலவீனமாகி உடையத் தொடங்கலாம்.

இந்நிலையில் தலைமுடிக்கு சீரான பராமரிப்பை கொடுத்து வந்தால், அது தலைமுடியின் தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து, ஆரோக்கியமான முடியின் வளர்ச்சியை தூண்டும். அதுவும் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சில இயற்கை வழிகளை பின்பற்றினால், தலைமுடியின் வலிமை அதிகரிப்பதோடு, முடி உடைவது தடுக்கப்படும் மற்றும் முடியின் அமைப்பும் மேம்படும். இப்போது தலைமுடியை வலிமையாக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. தேங்காய் எண்ணெய் மசாஜ்
* இதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 5-10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெய் மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
2. முட்டை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலில் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
3. வெந்தய ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் அதை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
4. கற்றாழை மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு நற்பதமான கற்றாழையின் ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
5. வெங்காய ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு வெங்காயத்தை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சாற்றினை பஞ்சுருண்டையை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
6. தயிர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
