சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது!

Guru Ketu Conjunction 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவானின் அதிசார பெயர்ச்சி நிகழவுள்ளது. அதுவும் இந்த பெயர்ச்சியானது அக்டோபர் 31 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார்.

Guru Ketu Conjunction 2026 These Zodiac Signs Bank Balance Will Double

குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமாக கருதப்படும் கேது இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சிறப்பானதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த சேர்க்கையால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து, உள்ளுணர்வு அதிகமாக இருக்கும், கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும், சிலருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத வளர்ச்சி அல்லது ராஜயோக பலன்கள் கிடைக்கும்.

அக்டோபர் 31 ஆம் தேதி நிகழும் குரு-கேது சேர்க்கையின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழில் மற்றும் வணிகத்தில் சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். இப்போது சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கையால் நற்பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிலர் இக்காலத்தில் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளால் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காண்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். வங்கியில் இருப்பு இரட்டிப்பாகும். தி நிலைமை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் பல கனவுகள் நனவாகும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நீண்ட காலமாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பை பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் குருவின் அருளால் இக்காலத்தில் கட்டாயம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த குரு பெயர்ச்சிக்கு பின் எதிர்பார்த்த சம்பளத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் குறைந்து சந்தோஷம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் காரணமாக பேன்க் பேலன்ஸ் அதிகரித்து, நிதி நிலைமை வலுவடையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, October 20, 2026, 18:35 [IST]
Desktop Bottom Promotion