மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Left Over Rice Chapathi In Tamil: உங்கள் வீட்டில் மீந்து போன சாதம் உள்ளதா? அந்த சாதத்தை தூக்கி போட மனமில்லையா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு சப்பாத்தி செய்யுங்கள். சாதம் கொண்டு சப்பாத்தியா என்று கேட்கலாம். ஆம், சாதம் கொண்டு பஞ்சு போன்று மென்மையான சப்பாத்தியை செய்யலாம். இப்படி மீந்து போன சாதம் கொண்டு சப்பாத்தி செய்யும் போது, சாதத்தை வீணடிக்கவில்லை என்ற ஒரு திருப்தி கிடைக்கும்.

Left Over Rice Chapathi How To Make Soft And Fluffy Chapati With Leftover Rice

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி சப்பாத்தி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மீந்து போன சாதம் - 1 கப்
* கோதுமை மாவு - 1/4 கப் + 1/4 கப்
* மைதா மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மீந்து போன சாதத்தை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/4 கப் கோதுமை மாவு மற்றும் 1/4 கப் மைதா மாவு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1/4 கப் கோதுமை மாவை சேர்த்து, நன்கு கைகளால் பிசைய வேண்டும். அப்படி பிசையும் போது பிசுபிசுவென்று தான் இருக்கும். அப்போது கையில் சிறிது எண்ணெயை ஊற்றிக் கொண்டு கையில் ஒட்டாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசைய வேண்டும்.
* பின் அந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் பிசைந்த மாவை சிறிது எடுத்து உருட்டி, கோதுமை மாவை பயன்படுத்தி சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பஞ்சு போன்ற சப்பாத்தி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 20, 2026, 20:25 [IST]
Desktop Bottom Promotion