Latest Updates
-
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Nair Kadai Vengaya Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் பெரும்பாலும் காலை டிபனாக இருக்குமா? இவற்றிற்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து முடிவெடுப்பது ஒரு பெரிய டாஸ்க்காக உள்ளதா? என்ன தான் சட்னியில் பல வெரைட்டிகள் இருந்தாலும், எதை செய்ய நினைத்தாலும் இப்போது தான் செய்தது போன்று உள்ளதா?

சற்று வித்தியாசமான சுவையுடைய சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் நாயர் கடை வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியானது இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, வடை, பஜ்ஜியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் பின் அடிக்கடி இந்த சட்னியை செய்ய சொல்லி கேட்பார்கள்.
உங்களுக்கு இந்த நாயர் கடை வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாயர் கடை வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 3
* பூண்டு - 6 பல்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 4 கொத்து
* புதினா - 1/2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் வரமிளகாயையும்
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
மிளகாய் தூள் சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மிளகாய் தூளின் பச்சை வாசனை
போக வதக்கி வேக வைக்க வேண்டும்.
* வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு,
அதில் 1 கைப்பிடி கொத்தமல்லி மற்றும் 1/2 கைப்பிடி புதினாவை சேர்த்து
நன்கு கிளறிவிட்டு குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நீரை ஊற்றி,
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, எவ்வளவு நீர் வேண்டுமானாலும்
சேர்த்து கலந்து கொள்ளலாம். ஏனெனில் இது தண்ணி சட்னி போன்று தான்
இருக்கும். இந்த சட்னிக்கு தாளிப்பு எதுவுமே தேவையில்லை. இப்போது
சூப்பரான நாயர் கடை வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
