Latest Updates
-
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க..
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
Mars Transit In Leo On 12 November 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.

செவ்வாயின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி விஷயங்களில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மேலும் பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைவார்கள், வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அவசரப்பட்டு அல்லது கோபத்தில் எடுக்கும் முடிவுகள் சிக்கல்களை அதிகரிக்கும். இப்போது செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்வதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். நிதி ரீதியாக இம்மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்க முடிந்தாலும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியின் போது 10 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பொறுமையாக இருந்து, உடன் வேலை செய்வோருடன் நல்லுறவை பேணுவதன் மூலம், பணியிடத்தில் நல்ல பலனைப் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தலைமைப்பண்பும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் கருத்துக்களை திறம்பட வெளிப்படுத்தி, பணியிடத்தில் தங்களின் நிலையை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் இம்மாதத்தில் புதிய முதலீடுகளை செய்ய நினைத்தால், அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல், நன்கு அலசி ஆராய்ந்து அனைத்தையும் கவனித்து முடிவெடுக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



