Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்..
Venus Transit In Uthiram Nakshatra on 29 July 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது சுக்கிரன் சூரியனின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 29 ஆம் தேதி சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். ஜோதிடத்தில் சூரியனும், சுக்கிரனும் பகைமை உறவைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், அதில் சிலருக்கு சிறப்பாகவும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் சிரமங்கள் அதிகரிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணப்பிரச்சனை தலைத்தூக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் மோதல்களைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு பண பரிவர்த்தனைகளையும் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதேப் போல் உறவுகள் விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் குடும்ப உறுப்பினர்களுடன் சிறு விஷயங்களுக்கும் மனக்கசப்புகள் ஏற்படலாம். மேலும் இக்காலத்தில் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு புதிய முதலீடுகளை செய்யும் முன்பும் அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் சற்று அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். முக்கியமாக அகங்காரம், அதீத தன்னம்பிக்கை போன்றவை உங்களின் வேலையை பாதிக்கலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை பேண முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிரமங்கள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். எனவே இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகள் செய்யும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முடிந்தால், பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. வேலை தொடர்பாக தேவையில்லாத பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதனால் நிதி இழப்பும், உடல் சோர்வும் தான் கிட்டுமே தவிர, வேறு எதுவும் கிடைக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


