Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
Thalicha Thayir Kuzhambu Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது சமையலறையில் நீண்ட நேரம் சமைக்கவும் பிடிக்காது, அதே சமயம் காரசாரமாகவும் சாப்பிட பிடிக்காது. இப்படிப்பட்ட சூழலில் இந்த கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தயிரைக் கொண்டு சிம்பிளாக ஒரு குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இந்த தயிர் குழம்பு 5 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும். மேலும் இந்த தயிர் குழம்பை ஒருமுறை செய்தால், கோடைக்காலத்தில் அடிக்கடி இதை செய்வீர்கள். அந்த அளவில் ஈஸியாகவும், ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு தாளிச்ச தயிர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாளிச்ச தயிர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டி தயிர் - 1/4 லிட்டர் அல்லது 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (தட்டியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிரை எடுத்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு
கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் கெட்டி தயிரை சேர்த்து, கொத்தமல்லியை தூவி கிளறி
இறக்கினால், சுவையான தாளிச்ச தயிர் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications