Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உடம்பு சூடு பிடிச்சு அவதிப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
Body Heat Remedies In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெளியே சென்றாலே சூரியக்கதிர்கள் ஆளை சுட்டெரிக்கும் அளவில் ஆக்கிரோஷமாக இருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலில் அதிகம் சுற்றிக் கொண்டிருந்தால், பின் உடலின் வெப்பநிலை ஆரோக்கியமற்ற முறையில் அதிகமாகி, ஹைப்பர்தெர்மியா என்னும் மோசமான நிலைக்கு ஆளாக்கிவிடும்.
ஒருவருக்கு இந்த நிலையானது சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படலாம். அதுவும் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால், இந்த ஹைப்பர்தெர்மியா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெரும்பாலும் கோடையில் இப்பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், உடல் சூடு அதிகரிக்காமல் இருப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

உடலின் வெப்பநிலையைக் குறைக்க நிறைய உணவுகள் உதவி புரிகின்றன. அந்த உணவுகளை கோடைக்காலத்தில் சற்று அதிகமாக உட்கொண்டு வந்தால், உடல் சூடு அதிகரிப்பதைத் தடுக்கலாம். இப்போது உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில உணவுகளைக் காண்போம்.
1. தண்ணீர்
உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க சிறந்த வழி உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது தான். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதற்கு தினமும் போதுமான அளவு நீரை அருந்த வேண்டும். அதுவும் கோடையில் ஒரு நாளைக்கு 2.7 லிட்டர் முதல் 3.7 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
2. தர்பூசணி
கோடைக்காலத்தில் அதிகம் விற்கப்படும் ஒரு பழம் தான் தர்பூசணி. இது அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்களுள் ஒன்றாகும். இந்த பழத்தில் சுமார் 90% நீர் நிறைந்துள்ளது. மேலும் இந்த தர்பூசணி பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக நிறைந்துள்ளன.
3. வெள்ளரிக்காய்
தர்பூசணி பழத்தைப் போலவே வெள்ளரிக்காயிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது தவிர வெள்ளரிக்காயில் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. இந்த வெள்ளரிக்காயை கோடைக்காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால், உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, கோடையில் சந்திக்கும் மலச்சிக்கலில் இருந்தும் விடுபடலாம்.
4. தயிர்
கோடைக்காலத்தில் ஒவ்வொருவரும் தவறாமல் தங்களின் உணவில் சேர்க்க வேண்டிய ஒரு பொருள் தான் தயிர். பால் பொருட்களுள் ஒன்றான தயிரை வெயில் காலத்தில் தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது உடல் வெப்பநிலையைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
5. இளநீர்
உங்களுக்கு நீரை அதிகமாக குடிக்க பிடிக்காவிட்டால், இளநீரை வாங்கி குடியுங்கள். இளநீரைக் குடிப்பதன் மூலம், உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் இளநீரில் உள்ள சத்துக்கள் கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.
6. புதினா இலைகள்
புதினா இலைகள் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன. இப்படிப்பட்ட புதினா இலைகளைக் கொண்டு சட்னி செய்யலாம் அல்லது பழச்சாறுகள், தேநீர் மற்றும் பிற கோடைக்கால பானங்களில் சுவையை அதிகரிக்க சேர்த்தும் குடிக்கலாம். இதனால் அந்த பானங்களின் சுவை அதிகரிப்பதோடு, உடல் சூடும் குறையும்.
7. கற்றாழை
கற்றாழை நீர்ச்சத்து நிறைந்த மருத்துவ குணமிக்க தாவரமாகும். இந்த காற்றாழையை கோடைக்காலத்தில் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், இதன் ஜெல்லை சருமத்தில் தடவி வந்தால், கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
8. பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் கீரைகள்
வெயில் காலத்தில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை உட்கொண்டு வருவது நல்லது. ஏனெனில் இந்த காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதோடு, நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்களும் அதிகம் உள்ளன. இப்படிப்பட்ட காய்கறிகளை கோடைக்காலத்தில் அதிகம் உட்கொண்டு வர, உடல் சூடு குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
9. மோர்
தயிரைக் கொண்டு தயாரிக்கப்படும் மோரை கோடைக்காலத்தில் குடித்து வந்தால், தாகம் தணிவதோடு, உடலும் நீரேற்றத்துடன் இருக்கும். முக்கியமாக உடல் சூடு பிடிக்காமல் இருக்கும். அதோடு இந்த மோரைக் குடிப்பதன் மூலம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
10. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதை அனைவரும் அறிவோம். இது தவிர இதில் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால், கோடைக்காலத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை உட்கொண்டு வந்தால், கோடையில் சந்திக்கும் உடல் சூடு மற்றும் வேறு பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
எனவே கோடைக்காலத்தில் உடல் சூடு பிடிக்காமல் இருக்க விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications